பக்கம்:உரிமைப் பெண்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சுக் காலன்

27


டார்ச்சு ஒளியைத் திடீரென்று போடுவார்கள். புவியின் கண்கள் இருட்டு நேரத்திலே பூனையின் கண்கள்போல இன்னும் அகலமாக விரிந்திருக்கும். அதனால் பிரகாசமான ஒளி பட்டவுடன் புலி திகைப்படைந்து பார்வை கலங்கி அசைவற்று நிற்கும். அந்தச் சமயம் பார்த்து ஆற அமர இருந்து துப்பாக்கியிலே குறி வைத்துச் சுடுவார்கள். அதிலே அத்தனே ஆபத்துக் கிடையாது. ஷோக் மான் வேட்டையைப்போல இதுவும் ஷோக் வேட்டைதான்.

சுந்தரத்திற்கு இது கொஞ்சங்கூடப் பிடிக்காது. காட்டு மிருகங்கள் நடமாடுகிற இடத்திற்கு நேரே அவன் செல்லுவான். மான் முதலான தனக்கு விருப்பமான இரையைத் தேடிப் புலியும் அங்கு வந்து பதுங்கிக்கொண்டிருக்கும். அதைக் கண்டுபிடித்து நேருக்கு நேரே சுட வேண்டும். இதுதான் அவன் விரும்புவது. இதிலே ஆபத்துண்டு.சாமர்த்தியத்திற்கும் இடம் உண்டு. “ஷோக் வேட்டை என்றால் அது கிழவிகள் செய்யவேண்டிய காரியம்” என்பான் சுந்தரம்.

அவனை நீலகிரி வட்டாரத்திலே ஷிகாரி சுந்தரம் என்று தான் அனைவரும் அழைப்பார்கள். துஷ்ட மிருக வேட்டையிலே விருப்பமுள்ள செல்வர்களில் அவன் உதவியை நாடாதவர்கள் இல்லை. அதனால் சுந்தரத்திற்கு நல்ல வரும்படி புலித்தோலும் போட்டோக்களும் செல்வர்களின் வீட்டை அலங்கரிக்கும். சுந்தரத்திற்கு அவற்றைப் பற்றி லட்சியம் இல்லை. செத்துப்போன புலி அவன் கவனத்தை இழுக்காது. அதனருகில் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதிலும் அவன் ஆர்வங் காட்டுவதில்லை. புலியைச் சுட்ட சுந்தரம் துாரத்திலே விலகி நின்று கொள்ளுவான். கூட வரும் செல்வர்கள் செத்துப்போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/32&oldid=1137157" இலிருந்து மீள்விக்கப்பட்டது