பக்கம்:உரிமைப் பெண்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

உரிமைப் பெண்

 அந்த நிலையிலே ஒரு வினாடி செல்லுவதும் அவனுக்கு ஒரு யுகமாகத் தோன்றியது. முதுகில் மிகுந்த வலி கண்டது. எத்தனை நேரம் அப்படி உடம்பின் ஒரே பாகத்தைக் கரடுமுரடான நிலத்திலே வைத்துக்கொண்டிருப்பது? உறங்கும்போது அவன் அசையாதுதான் படுத்திருந்தான். ஆனால் ஆபத்து முன்னால் தலையெடுத்து நிற்கும்போது எப்படியோ இந்த அசையா நிலையை அவனால் பொறுக்க முடியவில்லை. இன்னும் சற்று நேரம் சென்றால் தன்னால் அசையாமலிருக்க முடியாதென்று அவன் நினைத்தான்.

பஞ்சுக்காலனுக்கும் அந்தச் சந்தேகமான நிலைமை பிடிக்கவில்லை. முன்னால் மானையிழந்த ஏமாற்றம் ஒரு பக்கம்; சுந்தரத்தை ஒழித்துக்கட்டாவிட்டால் தன் உயிருக்கு ஆபத்துத்தான் என்ற உணர்ச்சி ஒரு பக்கம்; பசி ஒரு பக்கம். இப்படி எல்லாம் சேர்ந்து அதன் பொறுமையைச் சோதித்தன. என்ன ஆனாலும் சரி, அந்த மனிதன் மேல் பாய்ந்தே தீருவதென்று அது முடிவு கட்டிவிட்டது. ஒரே விநாடி, பஞ்சுக்காலன் சரியாகத் துாரத்தை அளந்துகொண்டது. இனி அம்புபோல நேரே பாயவேண்டியதுதான் பாக்கி. சுந்தரத்திற்கும் அதன் எண்ணம் புலப்படாமல் இல்லை. கொஞ்சம் அசைந்தால் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவனை துாண்டுகோல் போட்டதாகும். ஆனால் அசையாமலிருந்து தான் என்ன பலன்? எப்படியும் அவன்மேல் பாய்வதென அந்தப் புலி முடிவு கட்டிவிட்டது. சுந்தரத்திற்கு ஒன்றுமே புலப்படவில்லை. தனது சாமர்த்தியமெல்லாம் இன்று உதவவில்லையே என்று அவன் உள்ளம் கலங்கினன். பாதுகாத்துக்கொள்ள ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/39&oldid=1137199" இலிருந்து மீள்விக்கப்பட்டது