பக்கம்:உரிமைப் பெண்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

உரிமைப் பெண்

 நினைத்தானம். ஒருநாள் தற்செயலாக அவன் வசித்து வந்த வீடு தீப்பற்றிக் கொண்டது. அச்செய்தி கேட்டு அவன் தான் உத்தியோகம் செய்யும் காரியாலயத்திலிருந்து ஓடோடியும் வந்தான். குழந்தை வீட்டிற்குள்ளே அகப்பட்டுக்கொண்டதை அறிந்தான். ஆனால் அவன் உள்ளே பாய்ந்து செல்லவில்லை. “ஐயோ! என் குழந்தையைக் காப்பாற்ற யாரும் இல்லையா? என்று கதறிக்கொண்டு நின்றானே ஒழிய, வீட்டிற்குள் நுழைய மனம் துணியவில்லை. காரணம் என்ன? அவனுக்கு அவனுடைய உயிர்தான் குழங்தையைவிடப் பெரிது. அதன் மேல்தான் அவனுக்கு ஆசை அதிகம்.” இவ்வாறு கதை சொல்லிக் கல்யாணசுந்தரம் தம் கொள்கையை நிலைநாட்ட முயன்றார்.

“சுவாமி ராமதீர்த்தர் இந்தக் கதையின் மூலம் நிரூபிக்க வந்த விஷயம் வேறு. ஒவ்வொருவனிடத்திலும் இறைவன் விளங்குகிறான் என்பதை விளக்க அவர் கதை சொன்னர். எனது எண்ணம் தவறு என்று அதன் மூலம் எவ்வாறு ஏற்படுகிறது? உயிர்தான் பெரிதென்று அவர் கூறவில்லையே?”

“நீங்கள் என்ன சொன்னபோதிலும் என் அபிப்பிராயம் மாருது. மனிதனுக்கு உயிரைவிடப் பெரிதாக என்ன இருக்க முடியும்?”

“நடராஜ பிள்ளைகூட இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால்........”

“எந்த நடராஜ பிள்ளை ?”

அவர்தான், பாங்கியிலே தலைமைக் கணக்காாக இருந்தாரே அந்த நடராஜ பிள்ளை. அவரும் உங்களைப் போலத்தான் வாதாடிக் கொண்டிருந்தார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/43&oldid=1137218" இலிருந்து மீள்விக்கப்பட்டது