பக்கம்:உரிமைப் பெண்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உள் நெருப்பு

“சொங்கப்பனா அப்படிக் கோபித்துக்கொண்டான்? அவனுக்குக் கோபமே வாாதே!” என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.

“வெறும் கோபம் மட்டுமா? பக்கத்திலிருந்தவர்கள் விலக்கி யிருக்காவிட்டால் பொன்னப்பனை அவன் கொன்றே இருப்பான்” என்று அந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உரைத்தார்கள். அதைக் கேட்டுக் காட்டுப் பாளையம் என்ற அந்தக் கிராமமே திகைத்துப் போய் விட்டது.

சொங்கப்பனுக்குக் கோபமே வாாது; அவனைக் கேலி பண்ணலாம், வையலாம், வம்புச் சண்டைக்கு இழுக்கலாம்; என்ன செய்தாலும் அவனுக்குக் கோபம் வந்ததை யாருமே கண்டதில்லை. கோபம் வந்தால் அவன் முகம் எப்படியிருக்கும் என்று பார்க்கக்கூட வெகு பேர் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் அந்த ஆசை இது நாள் வரையிலும் பூர்த்தியாகவே இல்லை. சிறுவர்கள் அவன் காதைப் பிடித்து இழுப்பார்கள்; தொந்தி வயிற்றைத் தடவிப் பார்ப்பார்கள். அவனைச் சூழ்ந்துகொண்டு,

தொந்தி வயிற்றுச் சொங்கப்பா
சோற்றுப் பானை எங்கப்பா
குந்திக் கொண்டு அள்ளப்பா
குறையக் குறையத் தின்னப்பா

என்று அவன் தொந்தி வயிற்றையும் பெருந் தீனியையும் பரிகாசம் செய்து பாட்டுப் பாடுவார்கள். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/6&oldid=1535141" இலிருந்து மீள்விக்கப்பட்டது