பக்கம்:உரிமைப் பெண்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

உரிமைப் பெண்

 கண்ணீர் பிதுங்கியது. நெடுநாள் நட்பு அல்லவா ? என்னால் தாங்க முடியவில்லை.

“அவர் சிரித்தார்; மகிழ்ச்சி இல்லாத சிரிப்பு; துயரச் சிரிப்பு. எனக்காகவா கண்ணீர் ? கடமை தவறியவனுக்கு எதற்காக இரக்கப் படுகிறீர்கள்?” என்றார் அவர்.

“எனக்கு மேலும் அழுகை வந்துவிட்டது. குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதேன். அழுவதற்குக் காலம் வரும். என்னுடன் சினேகமாக இருந்த தோஷத்திற்கு அப்பொழுது கண்ணீர் சிந்தலாம். இப்போது என்ன வந்துவிட்டது?” என்று அவர் கூறி மறுபக்கம் புரண்டு படுத்துக்கொண்டார்.

அன்றைக்குத்தான் அவர் பேசியது. பிறகு பேச்சே இல்லை பாங்கு ஊழியர்கள் நிதி கொடுக்கவும் இல்லை; பிரிவுபசாரக் கூட்டம் நடக்கவும் இல்லை. நடாாஜ பிள்ளை படுக்கையை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.

கடைசி நாளன்று நான் பக்கத்திலேயே இருந்தேன். அவர் ஏதேதோ பிதற்றினார். ஆவலோடு எதிர்பார்த்த ஒய்வைப்பற்றியோ, தாம் வளர்த்த பூச்செடிகளைப் பற்றியோ, மனைவி மகளைப் பற்றியோ அவர் நினைக்கவே இல்லை. கடமை ஒன்றைப்பற்றித்தான் என்ன என்னவோ கூறிக்கொண்டிருந்தார். வார்த்தைகள் தெளிவாக வரவில்லை.

ஆனால் மூச்சு நிற்பதற்கு முன்பு நன்றாக அனைவருக்கும் தெரியும்படி அவர் ஒரு தரம் நிதானமாகப் பேசினர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/63&oldid=1137338" இலிருந்து மீள்விக்கப்பட்டது