பக்கம்:உரிமைப் பெண்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் இடியும்

61

 போய்விட்டாள். தீயை வாக்கணத்திலே கொண்டு வந்ததைக் கண்ட நஞ்சப்பனுக்குத் தன்னை அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. “நல்ல யோசனை பண்ணினாய். இது தான் சரி. இனிமேல் உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன்” என்றான் அவன்.

“தொந்தரவொண்ணுமில்லை தாத்தா. அடுப்பு வேலை. கெட்டுப் போகுதேன்னு பார்த்தேன்” என்றாள் குமரி.

“ஆமாம்மா. அதைப்பாரு. சீக்கிரமா ஏதோ ரண்டு காச்சிக் குடித்துவிட்டுப் படுத்துக் கொள்வோம். பெரிய மழை வரும்போல் இருக்கிறது” என்றான்.

அதற்குள்ளே மறுபடியும் சுருட்டு அவிந்து போய்விட்டது. பேச்சை நிறுத்திவிட்டுக் கிழவன் அதைப் பற்ற வைக்கக் கரண்டியைக் கையில் தூக்கினான்.

மின்னல்போல மாராயி உள்ளே மறைந்துவிட்டாள்.

பனை ஒலை வேய்ந்த கூரையின் மேலே பெரும் பெரும் துளிகளாக விழும் மழையின் சப்தம் கேட்க ஆரம்பித்தது.

மாராயி வாசலுக்கு ஓடிவந்தாள். காய்ந்துகொண்டிருந்த சுள்ளிகளை யெல்லாம் அவசர அவசரமாகச் சேகரிக்கலானாள்.

“மாரு, உள்ளே வந்து விடு. மழையில் நனையாதே” என்று கூவினான் கிழவன்.

“விறகெல்லாம் நனைந்து போனல் நாளைக்கு அடுப்புப் பத்தவைக்க என்ன செய்வது தாத்தா?”

கொஞ்சம் எடுத்துக்கொண்டு சீக்கிரம் வா. மழையிலே நனையப்படாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/66&oldid=1137869" இலிருந்து மீள்விக்கப்பட்டது