பக்கம்:உரிமைப் பெண்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் இடியும்

63

 இருவரும் உணவருந்தியதும் கதவை நன்கு இழுத்துச் சாத்திவிட்டுப் படுத்துக்கொண்டார்கள். ஒலைக் கூரையின்மேல் திபு திபுவென்று மழை விழுந்துகொண்டிருங்தது. அதன் வேகத்தால் ஓரிடத்தில் ஒழுக்கெடுத்துச் சிறுமியின் மேல் சொட்ட ஆரம்பித்தது. நஞ்சப்பன் சட்டென்று எழுந்து அவர்கள் படுத்திருந்த பாயை வேறிடத்தில் தள்ளிப்போட்டான்.

“ஆறேழு வருஷமாச்சு, கூரைபோட்டு. இதுவரை ஒழுகவே இல்லை. இனிமேல் யார் இப்படிப் போடப் போகிறார்கள்? உன்னை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்கும் வரையில் இந்தக் கூரை தாட்டினால் போதும். அப்புறம் எப்படிக் கிடந்தால் என்ன?” என்று அவன் தனது உள்ளக் கருத்தை வெளிப்படையாகப் பேசினான்.

மராயிக்கு வயது சுமார் பன்னிரண்டிருக்கும். அவளுக்கு இப்பொழுது கல்யாணத்தைப் பற்றி யெல்லாம் எண்ணமே இல்லை. தன் தாத்தாவின் மனத்திலே படிங்திருக்கிற விசனத்திற்குக் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்பதே அவள் ஆசை.

“ஏன் தாத்தா, மழைத்துளி ஒரு சொட்டுக்கூட என் மேலே படப்படாது என்று நினைக்கிறீர்களே, என்னத்தினாலே?”

“மழையா? அதுதான் யமனாக வந்தது?” என்றான் கிழவன்.

மாராயிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. விஷயத்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டுமென்று அவள், “தாத்தா, நீங்கள் சொல்லறது எனக்கு அர்த்தமே ஆக வில்லை. எல்லாச் சங்கதியும் ஒன்று விடாமல் சொல்லுங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/68&oldid=1137939" இலிருந்து மீள்விக்கப்பட்டது