பக்கம்:உரிமைப் பெண்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் இடியும்

55

 பேரும் செய்யமாட்டார்கள். அதுவுமல்லாமல் உன் அம்மாள் என்றைக்குப் பார்த்தாலும் சீவுவதும், கொண்டையில் செவ்வந்திப் பூ வைத்து, நெற்றியிலே பெரிய பொட்டு வைத்துக்கொள்வதும் எனக்குப் பிடிக்கிறதே இல்லை.”

இதைக் கேட்டதும் மாராயிக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. வாய்விட்டு உரக்கச் சிரித்தாள். நஞ்சப்பன் தான் சொல்லுவதைச் சற்று நிறுத்தினான்.

“ஏன் தாத்தா, பாட்டி உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட புதிசிலே இப்படி யெல்லாம் பண்ணமாட்டாளா?” என்று சிறுமி குறும்பாகக் கேட்டாள்.

“பாட்டியா, அந்தக் காலத்திலே அவள் மாமனாருக்கு எதிரிலேயே வரமாட்டாள். அப்படி அகஸ்மாத் தாய் வந்துவிட்டாலும் முக்காடு போட்டுக்கொள்ளுவாள். அவள் சாகும் வரையிலும் அப்படித்தான். இந்தக் காலத்திலே யார் அப்படி இருக்கிறார்கள்? இப்போ எல்லாம் மாறிப் போச்சு. அந்தக் காலம் இனி வருமா?”

“கல்யாணமான பிறகு பாட்டி நாலஞ்சு வருஷந் தான் உயிரோடு இருந்தான்னு சொன்னிங்களே?”

“ஆமாம், இருக்கிற வரையிலும் அப்படி அடக்கமா இருந்தாள்.”

“அவள் செத்த பிறகு நீங்க மறு கல்யாணம் பண்ணிக்கவில்லையா?”

“கல்யாணம் வேண்டாம்னு ரொம்ப நாள் இருந்தேன். உன் அப்பனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சபிறகு தான் எனக்கும் கல்யாணம் பண்ணிக்கலாமென்று ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/70&oldid=1137994" இலிருந்து மீள்விக்கப்பட்டது