பக்கம்:உரிமைப் பெண்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டணம் கை

75

 அசையாது நின்றுகொண்டு எல்லாவற்றையும் கவனித்தேன்.

“அப்பொழுது எனக்குப் பக்கத்தில் இரண்டு மனிதர்கள் வந்து நின்றார்கள். ஒருவன் தன் கையில் ஒரு கடிகாரத்தைக் கட்டிக்கொண்டிருந்தான். மற்றவன் அதை விலைக்குக் கேட்டான். ஐம்பது ரூபாய் வேண்டுமானால் கொடுக்கிறேன்; அதற்கு மேலே என்றால் எனக்கு வேண்டாம் என்றான் அவன். எனக்குத் தெளிவாகக் கேட்கும் படி அவர்கள் வெளிப்படையாகத்தான் பேசினார்கள்; இரகசியமாகப் பேசவில்லை. அந்தக் கடைவீதி இரைச்சலிலே மெதுவாகப் பேசினால் எப்படிக் கேட்கப் போகிறது?

“இவ்வளவு குறைச்சல் விலைக்குக் கேட்பது நியாய மில்லை; நமக்குள் இருக்கிற சிநேகிதத்தை மனத்தில் வைத்துக்கொண்டு கேள்” என்றான் மற்றவன்.

“இஷ்டமிருந்தால் கொடு; நான் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லையே?” என்றான் விலைக்குக் கேட்கிறவன்.

விற்கிறவனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘அவசரம் ஆபத்திற்கு உன்னையெல்லாம் நம்பினால் இப்படித்தான்; தலையில் மிளகாய் அரைத்துவிடுவாய்; உனக்கும் ஒரு ஆபத்து வராதா? அப்பொழுது பார்த்துக்கொள்கிறேன்’ என்று கடுமையாகப் பேசிவிட்டு அவன் வேகமாக நடந்தான். அவன் எங்கே போனானென்று தெரியவில்லை. சட்டென்று மறைந்துவிட்டான்.

“மற்றவன் அவனைத் தேடிக்கொண்டே அங்கும் இங்கும் அலைந்தான். பிறகு கவலையோடு என்னிடம் வந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/80&oldid=1138102" இலிருந்து மீள்விக்கப்பட்டது