பக்கம்:உரிமைப் பெண்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

உரிமைப் பெண்

 ரூபாயைச் சுளை போலக் கொடுத்து வாங்கினேன். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம், இன்றைக்கு எனக்கு எப்படியும் கொஞ்சம் பணம் வேண்டியிருக்கிறது. என்னுடைய நெருக்கடியைத் தெரிந்துகொண்டு லாபமடிக்கப் பார்க்கிறான். இத்தனைக்கும் அவன் எனக்கு வெகு நாளாகச் சிநேகம். இந்தக் காலத்திலே சிநேகிதம் எங்கே இருக்கிறது?” என்று வெறுப்போடு பேசிவிட்டுக் கடிகாரத்தை என்னிடம் கொடுத்தான்.

அழகான கடிகாரம்; சமீபத்தில்தான் வாங்கினது என்பதில் சந்தேகம் இல்லை; அதற்குப் போட்டிருந்த தோல் பட்டை கூடப் பாலிஷ் மங்கவில்லை. எனக்கு அதன்மேல் ஆசை விழுந்துவிட்டது. குறைச்சல் விலைக்குக் கிடைத்தால் லாபந்தானே என்று நினைத்தேன்.

“எனக்கு அதை விற்று விட உனக்குச் சம்மதமா?” என்று மெதுவாகக் கேட்டேன்.

“யாராயிருந்தால் எனக்கென்ன? ரூபாய் 75 கொடுத்தால் யாருக்கு வேண்டுமானலும் விற்கக் தயார். என்ன செய்கிறது? என்னுடைய அவசரம் அப்படி இருக்கிறது!” என்று அவன் விசனத்தோடு பதில் கொடுத்தான்.

“கான் 60 ரூபாய் கொடுக்கிறேன். இஷ்டமா உனக்கு?” என்றேன் நான்.

“என்ன ஸார், நீங்களும் அந்தப் பயலைப் போலப் பேரம் செய்கிறீர்களே? யாராவது இதை அடைமானமாக வைத்துக்கொண்டு 50 ரூபாய் கொடுத்தால் மூன்று நாளில் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவேன். வட்டி வேண்டுமானாலும் கேட்டபடி கொடுப்பேன்” என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/83&oldid=1138145" இலிருந்து மீள்விக்கப்பட்டது