பக்கம்:உரிமைப் பெண்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

உரிமைப் பெண்


“பிச்சை எடுப்பதுதான் எனக்கு மேல் என்று தோன்றுகிறது. கிடைத்ததைக்கொண்டு சுயேச்சையாகக் காலங் தள்ளலாம். ஒருவருடைய பேச்சுக்கும் இஷ்டத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை.”

வாழ்க்கையில் அடைந்த கஷ்டங்களாலும், ஏமாற்றங்களாலும் அவள் இவ்வாறு பேசுகிறாள் என்பதை நான் உணர்ந்தேன். பிறகு மெதுவாக, “உன் கண்களை ஏன் அந்தச் சிப்பாய் போக்கினான்?” என்று கேட்டேன். அவள் பதிற் சொல்லச் சிறிது தயங்கினாள். என் குரலில் நடுக்கமும் சோகமும் இருப்பதை அவள் கண்டு கொண்டாள் போலிருக்கிறது. ஆனால் சற்று யோசித்துவிட்டு மறுமொழி சொல்லலானாள்.

“அவன் என்னைப் பலவந்தப்படுத்த ஆரம்பித்தான். கைத்துப்பாக்கியை நீட்டிப் பயங்காட்டினான். நான் அவனேடு போராடவேண்டியதாயிற்று. குடிவெறியில் இருந்தமையால் அவனை என்னால் ஒருவாறு சமாளிக்க முடிந்தது. ஆனால் நான் திமிறித் தப்பிக்க முயலும்போது அவன் கையில் இருந்த துப்பாக்கி வெடித்துவிட்டது. குண்டு போடாத தோட்டாவானதால் உயிர் போகவில்லை என்று ஆஸ்பத்திரி டாக்டர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் என் கண்கள் போய்விட்டன.”

இதைக் கேட்கும்போது என் தலை சுற்ற ஆரம்பித்தது. உள்ளத்தை யாரோ இறுக்கிப் பிழிவதுபோல இருந்தது. அப்படியே துாண் போல நின்று கொண்டிருந்தேன். ராதா மேலும் பேசினாளோ என்னவோ, என் காதில் ஒன்றும் விழவில்லை. நான் உணர்வற்றுச் சுற்றிலும் பார்க்கும்போது அவளைக் காணோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/95&oldid=1138227" இலிருந்து மீள்விக்கப்பட்டது