பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

13


இ படுகை செய்விதான் பிட்டன் கொற்றன்

கணைகால் இரும்பொறை மகன் பொறையன் இ அறை அறுத்தான்

இவற்றுள் காலத்தால் முந்தியவை ஒரு வரி வாசகமாகவும், பிந்தியவை இரண்டு மூன்று வரி வாசகங்களாகவும் காணப்படுகின்றன. தொடக்கக் கால உரைநடையைப் பற்றி அறிந்துகொள்ள இக்கல்வெட்டுக்களே சான்றுகளாக அமைகின்றன. இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை உரைநடை பயன்படுத்தப்பட்ட துறைகளைக் காட்டும். சமயப் பிரச்சாரத்திலும் மொழி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்த சமண சங்கத்தாருக்குத் தங்குமிடமும் உணவு வசதிகளும் செய்துகொடுத்தவர்கள் தங்கள் புகழை நிலைநிறுத்திக்கொள்ள உரைநடை வாசகங்களைக் கல்லின் மேல் வெட்டுவித்தனர். அக்காலத்தில் உரைநடை வழங்கிய் துறைகளைப் பற்றி இதற்கு மேல் தெரிந்துகொள்ளுவதற்குச் சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. கி.மு. 2ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. மூன்றாம் நூற். றாண்டு முடியும் வரையுள்ள காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் வரிவடிவ அமைப்பு மாறி வந்திருந்தபோதிலும், அதன் பொருளடக்கம் பெரும்பாலும் மேற்கூறியபடியே உள்ளது. இறுதிக் காலத்தில் சில மன்னர்கள் தேவகுலங்களை இயற்றிய செய்திகளையும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அரிக்கமேட்டில் அகப்பட்ட மண்பாண்டப் பகுதிகளில் வரையப்பட்டுள்ள பிராமி வாசகங்கள், அப்பண்டங்களை வாங்கி விற்ற வணிகச் சாத்தினரது பெயர்களாக இருக்கலாமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிராமிக் கல்வெட்டு ஆராய்ச்சிகளின் மூலம் தமிழ் உரைநடையின் ஆரம்ப காலம் கி.மு. இரண்டாவது நூற்றாண்டு எனத் தெரிகிறது. ஆயினும் உரைநடை நூல்களோ, உரைநடை வரலாறுகளோ எவையும் இருந்ததாக அவற்றின் மூலம் அறிந்துகொள்ள முடியவில்லை.

சங்க இலக்கியங்களின் அடிக்குறிப்புகள்

கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டு வரையிலும் உரைநடையைப் பற்றி அறிந்து கோள்ளக் கல்வெட்டுக்களைத் தவிர இலக்கியச் சான்றுகளும்