பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

உரைநடை வளர்ச்சி


பிரசஸ்தி கூறும். பிற்பகுதி 'வியவஸ்தை' அல்லது செய்திகளைக் கூறும். பிற்பகுதி தமிழில் இருக்கிறது. இவ்வுரைநடை, நெகிழ்ச்சியானதாகவும் எளிதான்தாகவும் காணப்படுகிறது. இதனைப் பேச்சுவழக்கு மொழி என்று கூறலாம். இதன் உள்ளடக்கம் இலக்கியப் பொருள் அல்ல. உலகவியவஸ்தை, நில உரிமை மாற்றம், அரசியல் ஆணைகள், அவை நிறைவேற்றப்படும் முறை, கோயில் நிருவாகம் முதலிய புதிய உள்ளடக்கத்திற்கேற்ற, மக்களது பேச்சு வழக்கிற்கு நெருங்கிய நடையில் அவை எழுதப்பட்டன. பெரும்பான்மையான செப்பேடுகள் பிராமணர்களுக்கும் சமணப்பள்ளிகளுக்கும் அளிக்கப்பட்ட அறக்கொடைகளின் ஆவணங்களாதலால், அவர்களுக்குப் பழக்கமான சொற்கள் மிகுதியாக வருகின்றன. சமயத் தொடர்புடைய சொற்கள் சம்ஸ்கிருதமாகவோ, தமிழ் அருஞ்சொல்லாகவோ இருப்பதைக் காணலாம். இவை மக்களுக்கு விளங்காவிடினும், தானம் பெறுவோருக்கு விளங்கக் கூடியவையே. இவ்வாறு, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டுடன் முடியும் காலத்தில் இரு வகையான உரைநடைகள் தோன்றின. ஒன்று இலக்கிய வழக்கு; மற்றொன்று உலகியல் வழக்கு. முதலாவது, இலக்கியம் கற்றறிந்தோருக் காகவும், இரண்டாவது, இலக்கிய அறிவில்லாத கிராமப் பொதுமக்கள் அறிந்துகொள்ளுவதற்காகவும் தோன்றியவை.

களவியல் உரை இவ்விரண்டு நடைகளும் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பெரிதும் வளர்ச்சி பெற்றன. இலக்கிய உரைநடை ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய களவியல் உரையில் வளர்ச்சி பெற்ற திலையில் காணப்படுகிறது.