பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

உரைநடை வளர்ச்சி


களை நிறுவுதற்குரிய விதிகளையும் முறைகளையும் எடுத்துணர்த்துகிறது. இவை போன்ற கல்வெட்டுகள் பல அவ்வரசன் காலத்தில் வரையப்பட்டுள்ளன. அவன் காலத்திற் நான் இவ்வமைப்புகள் நிறுவப்பட்டிருக்கவேண்டும். இப்புதிய முறைகளை விளக்கவும் விதிமுறைகளைத் தெளிவாக வரையறுக்கவும் உரைநடை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுரைநடையில் தெளிவும் செறிவும் விளங்கக் காண்கிறோம். இக்கல்வெட்டில் கூறப்பட்ட விதிகளின்படி குடவோலை முறை மூன்று நூற்றாண்டு காலம் வழக்கிலிருக்கும்பொழுது அதிகாரத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்தியிருக்கவேண்டும். வரி வசூலில் ஊழல்கள் தோன்றியிருக்கவேண்டும். குடவோலை பறிக்கப்படுவதற்குத் தகுதியுடையோர் அதிகமாக மூன்றாம் இராசராசனது காலத்தில் விதிமுறைகளை மாற்றிச் சேய்ஞலூர் சபையார் ஒரு சாசனம் வெளியிட்டிருக்கிறார்கள். அது மூன்று நூற்றாண்டுகளில் உரைநடையில் தோன்றிய மாறுதல்களைக் காட்டுகிறது. இக்கல்வெட்டு கி. பி. 1245 செப்டம்பர் 23ஆம் நாள் வெளியிடப்பட்டது.

ஸ்வஸ்தியூரீ திரிபுவனச் சக்கிரவர்த்திகள் பூரீராஜராஜ தேவர்க்கு யாண்டு முப்பதாவது கன்னி நாயற்றுப் பூர்வபட்சத்து பிரதமையும் சனிக்கிழமையும் பெற்ற சித்திரை நாள் விருதராஜ பயங்கர வளநாட்டு மிழலை நாட்டு சேய்ஞலூர் உடையார் விஸ்வேஸ்வர தேவர் கோயில் மூலபருஷையர் கூட்டங் குறைவறக் கூடியிருந்து கிராம காரியம் வியவஸ்தை பண்ணினபடி நம்மூர்க் கூட்டம் இடுமிடத்து ஒரு வலம்வத்ஸ்ரஞ் செய்தார் அஞ்சாம். வத்லரஞ் செய்யவும் புத்ரர்கள் நாலாம் வத்ஸரம் செய்யவும் ப்ரா தாக்கள் மூன்றாம் வத்ளலர ஞ் செய்யக் கடவதாகவும் அனாதியாக வியவஸ்தையுண் டாகையில் இந்த வியவஸ்தைப்படியே செய்யவும் இப்படிச் செய்யுமிடத்து நாற்பது வயஸ் ஸில் தாழா தாரைப் பார்த்து இடவும் இப்படி கூட்டமிடுமிடத்து ஊராகத் திரண்டிருந்து இராஜகீய மான நாளில் பூர்வ புருஷர்கள் செய்தபடிக்கீடாக ஆமென்ன இடக்கடவதாகவும் இப்படி தவிர முதலி கள்ளுடனே கூடி நின்று உள்வரிக் கூட்டம் புகுதல் வியவள்தைப்படியைத் தவிரப் புகுதல் செய்தாருண் டாகில் கிராம துரோகிகளாய் இவர்களை ஸர்வஸ்வ ஹரணம்