பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

29


அசைந்து, அசைந்த ஒப்பனை அழகை அங்குள்ள கண்ணாடியிலேயே கண்டு இதயம் குளிர்ந்து அந்தரங் களைந்து அவை தம்மை முன் இருந்தபடியே வைத்து விட்டு வேறு கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பர். ஆழ்வாரும் திருமகளாரும் அதிப்பிரீதியுடன் அங்கிருந்து புறப்பட்டு திருவரங்கன் திருப்பதியுள் எழுந் தருளினவாறே 'ஆடிக்கொடுத்தாள் வந்தாள், சுரும்பார் குழற்கோதை வந்தாள், ஆண்டாள் வந்தாள், ஆழ்வார் திருமகளார் வந்தாள், திருப்பாவை பாடிய செல்வி வந்தாள், தென்னரங்கம் தொழும் தேவி வந்தாள்’ என்று பல சின்னங்கள் பரிமாற எழுந்தருளுவித்துக் கொண் அழகிய மணவாளன் திருமண்டபத்துள் சென்று, நிறுை திருப்பலக்கின் பட்டுத்திரையை வாங்க, அப்போதே நாச்சியார் அகிலம் காண உதறி உடுத்த பட்டுச்சேலையும், பருத்த செங்கழுநீர் மாலையும், திருதுதல் கஸ்தூரி நாமமும், கயல் போல் மிளிர்ந்து காதளவோடிய கடைக்கண் விழியும் ப்ரகாசிக்க, சிலம்பார்ப்ப, சீரார் வளை ஒலிப்ப அன்ன மென்னடை கொண்டு அணி அரங்கத்தான் திரு முன்பே சென்று கண்ணாரக் கண்டு களித்துக் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் பேர் பெற்று உள்ளே புகுந்து நாகபர்யங்கத்தை மிதித்தேறித் திருவரங்கச் செல்வனைச் சேர்ந்து அவன் திருவடிகளிலே அந்தர்ப்பவித்தருளினார்.

கதைகள் கூறும் பகுதி தமிழிலேயே எளிதான அழகிய நடையில் எழுதப்பட்டது. சமயக் கருத்துக்கள் மணிப்பிர வாளத்தில் எழுதப்பட்டன. இந்த நடையை முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியவர்கள் சமணர்களே. இவர்கள் கர்நாடகம், தமிழ், ஆந்திரம் முதலிய மூன்று மொழிப் பகுதிகளிலும் வாழ்ந்த தமது சமயங் களுக்குப் போதனை செய்யப் பொதுவான சமயக் கருத்துக்களைக் கிரந்தத்திலும், அவ்வப்பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தெரிந்த கதைகளைத் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளிலும் எழுதினார்கள். பல்லவர் கால ஆட்சிப் பகுதி மூன்று மொழி பேசுகிறவர்களைக் கொண்டிருந்தது போல, சோழர் காலத்திலும் மும்மொழி பேசுவோர் அவர் ஆட்சி எல்லைக்குள் வாழ்ந்தனர். இதனால் தமது சமயத்தைப் பரப்ப விரும்பிய சமணரும் வைணவரும் சமயத் தொடர்பு மொழியாக மணிப்பிரவாளத்தைப் பயன்படுத்தினர்.