பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புதிய துறைகளில் உரைநடை


பதினாறாம் நூற்றாண்டின் இடையில் உரைநடையில் ஒரு புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டது. உரைநடையைப் பயன்படுத்தும் நோக்கம் புதியதோர் துறையாகக் கத்தோலிக்கச் சமயப் பிரச்சாரத்திற்குச் சென்றதே அதன் காரணமாகும்.

அக்காலத்தில் அச்சு இயந்திரம் தமிழ் நாட்டிற்கு ஆண்டிருகு ஆண்ட்ரூஸ் என்ற கத்தோலிக்கச் சாமியாரால் கொண்டு வரப்பட்டது. மரக்கட்டையினால் அச்சுக்கள் செய்யப்பட்டன. கொல்லத்தில் முதன் முதலாகக் கிறிஸ்தவ ஜபநூல் அச்சிடப்பட்டது. அதற்குக் கிறிஸ்தியானி வணக்கம்' என்று பெயர்.

இதன் பிறகு, ஆண்டிருகு ஆண்ட்ரூஸ் சாமியார் தாம் வாழ்ந்த தூத்துக்குடியில் அச்சு இயந்திரத்தை நிறுவினார்.

அச்சமயம் கத்தோலிக்கர்களாக மாறியிருந்த கடற்கரை மக்களான பரதவர் எழுத்தறிவு இல்லாதவர்கள். புனித சேவியர் என்னும் பாதிரியார் அவர்களுக்குக் கிறித்தவ வணக்கத்தைத் தமிழில் மனப்பாடம் செய்யக் கற்றுக்கொடுத்தார். சிறுவர்களுக்கு ஆண்டிருகு ஆண்ட்ரூஸ் தமிழ் எழுத்தைக் கற்பித்தார். பெரியவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எனினும் அடியார் வரலாறு (Lives of Saints) என்ற நூலை ஆண்ட்ரூஸ் சாமியார் அச்சிட்டார். இதுவே தமிழில் முதலாக வெளிவந்த நீண்ட உரைநடை நூலாகும்.

மேற்கூறிய நிலைமைகளில், நூலில் பரதவர் பேச்சுத் தமிழையொட்டியே அடிகள் நூலை எழுதினார். அவரே கொச்சை கலந்த தமிழைத்தான் அறிந்திருந்தார். எனவே, அதனைச் சிறிது திருத்தியே தமிழ் நடையை அமைத்தார். பரதவர்களுக்கு நாட்டுப் பாடல்களிலுள்ள புராணக் கதைகள் தான் தெரிந்திருந்தன. எனவே பாதிரியார், புராணக் கதைகளின் நடையிலேயே கிறித்தவ அடியார் வரலாறுகளை எழுதினார். அந்த நடை தனிமையான பேச்சு நடையாக இருந்தது. எழுத்தறிந்த பரதவர் படிப்பதற்கேற்றவாறும் இருந்தது.

இக்காலத்திற்குப் பின் டிநோபிலி, பெஸ்கி முதலியவர்கள் தமிழில் எழுதினார்கள். அவர்கள் மதுரையில் வாழ்ந்தவர்கள். உயர் சாதிக்காரர்களைக் கிறித்தவச் சமயத்திற்கு மாற்றும்