பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

உரைநடை வளர்ச்சி


செந்தமிழ் நடையில் எழுதப்படவில்லை. அதில் எழுத்துப் பிழைகள் மலிந்துள்ளன. அநேக படியாத குமாஸ்தாக்களைக் கொண்டு எழுதுவித்தது. இந்த எழுத்துப் பிழைகளும் கருந்தமிழ் நடைக்கும் ஒரு காரணமாக இருக்க லாம். தினசரி கருந்தமிழில் எழுதப்பட்டிருப்பதாலும், அதன் நடையில் ஒரு வன்மையும், ஒட்டமும் இருப்பதாலும், அதை நாம் செந்தமிழாக்காமல் அப்படியே அச்சிடுவதற்கு அறிவாளிகள் ஆட்சேபிக்கமாட்டார்கள் என்று கருதுகிறோம். அவர் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைப் படிக்கும் போது அக்காலத்துத் தமிழ் நாட்டைச் சலனப்படக் காட்சியில் பார்ப்பது போன்ற உணர்ச்சி நமக்கு உண்டா கிறது. அத்தினசரியாகப் புகைப்படச் சுருள் அவிழ, அவிழ, எத்தனை விதமான உருவங்கள் தோன்றி மறைகின்றன! ஒவ்வொரு உருவமும் உயிரோடு இருப்பது போலத் தோன்றுகிறது. ஊசியால் குத்தினால் அவ்வுருவங்களில் இருந்து ரத்தம் வருமென்று நமக்குத் தோன்றும். 'கிசு கிக’ மூட்டினால் சிரித்து விடுவார்கள் என்று நினைப்போம். அவ்வளவுக்கு அவை உயிருள்ள மனிதர்கள் என்ற உணர்ச்சி தமக்கு உண்டாகிறது. கருத்தமிழ் என்று கொச்சை கலந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் தடையை வ.வே.சு. ஐயர் குறிப்பிடுகிறார். கொச்சை நீக்கிவிட்டாலும்கூடக் கருந்தமிழின் தன்மை போகாது. அப்படியானால், டையரியின் நடையையும், ஐயரின் நடையையும் ஒப்பிடும் பொழுது ஐயரின் நடைதான் செந்தமிழ் என்று சொல்லலாம். அதுவும் பேச்சு நடைக்கு நெருக்கமானது என்றறியலாம். (செல்லப்பா)

வரலாற்று நூல்களில் உரைநடை

18ஆம் நூற்றாண்டில் கொங்குதேச ராசாக்கள் சரித்திரம் என்ற நூல் ஒன்று எழுதப்பட்டது. அது கொங்குதேச மன்னர்களின் வரலாறு. புராணப் பாங்கிலும் வரலாற்றுப் பாங்கிலும் இரு போக்குகளும் கலந்து எழுதப்பட்டது. இதன் நடையும் பேச்சு நடையில் உள்ளது. இதுவும் கல்வெட்டின் வியவஸ்தைப் பகுதியின் நடையை ஒத்தது. அரசர் பெருமை