பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

39

கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும், அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்து ரே வேண்டுமென்பாளாயின் அது நடந்தே தீரும். இங்ங்னம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி மன வருத்த மேற்படுவதுண்டு. ஆனால் அம்மனவருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார்.

தமிழ்ப் பற்று

உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம் போல் விளங்குகிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப் போல வலிமையும், திறமையும், உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமேயில்லை.

இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம், மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அதுவரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச் சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக் கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்கவேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்.

சீர்திருத்தக் கருத்துக்கள்

செய்யூரிலிருந்து ஶ்ரீமாதவய்யா ஒரு கிழவருடைய விவாகத்தின் சம்பந்தமாக எழுதியிருந்த கடிதம் சில தினங்கள் முன்னே சுதேசமித்திரனில் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது.

கிழவருக்கு வயது 70. அவருடைய தாயார் இன்னும் உயிரோடிருக்கிறாள். அந்தப் பாட்டி க்கு வயது 98. இந்தத் தாயாருக்கும் தமக்கும் உபசாரம் செய்யும் பொருட்டுக் கிழவர் ஒரு பதினாறு வயதுக் குமரியைக் கலியாணஞ் செய்து கொள்ளப் போகிறாராம். இதே கிழவரிடம் இதைத் தவிர இன்னும் 2 குமரிகளின் ஜாதகம் வந்திருப்ப