பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

41

ஆண் நசுக்கக் கூடாது. இந்த நியாயத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவி செய்யவேண்டும். உங்களுக்குப் பராசக்தி நீண்ட ஆயுளும் இஷ்டகாம்ய சித்திகளும் தருவாள் என்று அந்த மிளகாய்ப் பழச்சாமியார் சொன்னார். (மிளகாய்ப்பழச் சாமியார்-வசனம் 714)

தேசிய இயக்கத்தால் கிளர்ச்சி பெற்ற பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கத்தின் சகல துறைகளிலும் பாரதியின் உரைநடை ஊடுருவி நிற்கிறது. உறங்குவோரைச் சாட்டையடி கொடுத்து எழுப்புகிறது. ஐயமுற்றோரை ஒளிகாட்டித் தெளிவிக்கிறது. பகைவர்களைத் தருக்கத்தால் மடக்குகிறது.

புதிய கருத்துக்களை மக்களின் எளிய பேச்சுத் தமிழில் கூறுகிறது சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களையும் சமூகப் புரட்சிக் கருத்துக்களையும் தமிழ் வளர்ச்சி பெறத் தமது திட்டங்களையும் பொருளுக்கேற்ற நடை வேறுபாடுகளோடு பாரதி வெளியிடுகிறார்.

மறுமலர்ச்சிக் காலத்தின் கவிதைக்கு அவர் தந்தையா யிருப்பது போலவே, உரைநடைக்கும் அவர் தந்தையாகவே விளங்குகிறார்.