பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

45


தில், அப்பொருள்களும் இல்லை, அவற்றைக் குறிப்பிட ச் சொற்களும் இல்லை.

வழக்குச் சொற்கள்

சைக்கிள், ரயில், பஸ், ஃபோன், ரேடியோ, டிரான்சிஸ்டர், டேப் ரிக்கார்டர் போன்ற சொற்களுக்குப் பதில் சொற்கள் கண்டுபிடித்து வழங்கினாலும், மக்கள் பேச்சு வழக்கிற்கு அதனை வலிந்து புகுத்துதல் இயலாது. மறைமலையடிகளே, கடிதம் கொணர்வோனை, போஸ்ட் மேன்' (Post Man) என்றுதான் அழைத்தார். இவை யாவும் பேச்சு வழக்கில் தமிழாகிவிட்டன.

ஓர் இயந்திரத் தொழிலாளி, ஆங்கிலம் என்று தெரியாமலே பல ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறான். 'ஷிப்ட், ப்ரேக்டெளன், ஸ்பின்னர், லே-ஆப், ஸ்டிரைக், லாக்அவுட்' ஆகியவை ஆங்கிலச் சொற்கள் என்றால், தொழிலாளி எனக்குக்கூட ஆங்கிலம் தெரிகிறதே என்று ஆச்சரியமடைகிறான். இவை எந்த மொழிச் சொற்கள் என்பதே அவனுக்குத் தெரியாது.

மக்களிடையே பரவியுள்ள மொழி வழக்கை எழுத்தாளன் பயன்படுத்தவேண்டும். பேச்சு வழக்கிலோ, எழுத்து வழக்கிலோ இல்லாத புதிய பொருள்களுக்கும், புதிய கருத்துக்களுக்கும் அவை எந்த நாட்டிலிருந்து வந்தனவோ அச்சொற்களையே பயன்படுத்தவேண்டும்.

வாழும் மக்களுக்காக

இதனால் தமிழே மாறிப்போய்விடுமே, அடுத்த நூற்றாண்டில் இனம் தெரியாமல் மாறிவிடுமே என்று தனித்தமிழ் வாதிகள் கவலைப்படுகிறார்கள். நம் காலத்து மக்களுக்காகத் தான் நாம் எழுதுகிறோம். அவர்களுக்கு விளங்காத, பொருளைச் சரியாக விளக்காத சொற்களைப் பெய்து எழுதுவதால், நம் காலத்து மக்களுக்கே புரிந்துகொள்ளமுடியா தென்றால், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வாழப் போகும் மக்களைப் பற்றிக் கவலையென்ன? அவர்களுக்குத் தேவையான அறிவை அவர்கள் காலத்து எழுத்தாளர்கள் முழுமை செய்வார்கள்.

இரண்டாயிரம் ஆண்டு தொடர்ச்சியான வளர்ச்சியுள்ள தமிழ் மொழி, புதிய புதிய சொற்களை ஏற்றுக் கொள்ளும் திறன் உடையது. சொற்கள் வந்து சேருவதால் மொழியின் அமைப்பு முறை (Structure) மாறுவதில்லை. இதனால்தான்