பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

உரைநடை வளர்ச்சி


சங்க இலக்கியங்களை, அவற்றைக் கற்றோர் அறிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியங்களை, எளிய தமிழ் மகன் விளங்கிக் கொள்ள முடியுமா? ஒர் எஞ்சினியர் அல்லது டாக்டர் அதனைப் படித்தறிந்துகொள்ள இயலுமா? அவனுடைய துறைகளில் தமிழில் நூல்கள் இயற்றப்பட்டால்தான் அவன் அவற்றைப் படிப்பான்.

மொழி வளரவேண்டும்

எனவே தற்கால வளர்ச்சிக்கேற்பத் தமிழ் வளரவேண்டும். அறிவு வளர்ச்சியின் வேகத்துக்கேற்பத் தமிழைத் தமிழ் மக்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தின் துணையின்றியே பல இயல்களும் தமிழில் கற்பிக்கப்படும்பொழுது, மொழிமாற்றம் ஏற்படத்தான் செய்யும். மொழித் தூய்மையைக் காப்பாற்றவேண்டும் என்றால், அறிவு வளர்ச்சியைத் தடை செய்யவேண்டும். தூய தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிக்கும் வரை, உலக விஞ்ஞானிகள் சிந்திக்கவே கூடாது, தொழில் நுணுக்கம் வளரக்கூடாது, மானிடவியல் துறைகளின் ஆராய்ச்சி தடுக்கப்படவேண்டும் என்று தனித்தமிழ்வாதிகள் கருதுகிறார்களா? அறிவு வளர்ச்சியைத் தமிழரிடையே பரப்பத் தமிழைத் தமிழர் தகுதியுடையதாக்கவேண்டும். ஒரு நூலை எழுதுகிறவன், யாருக்காக எழுதுகிறானோ, அவனுக்கேற்ற நடையைக் கையாளவேண்டும்.

மணிக்கொடி காலம்

மணிக்கொடி, தமிழ்நாட்டில் அக்காலத்தில் இருந்த புலவர் ஆதிக்கம், பண்டித ஆதிக்கத்திற்குச் சவால் விட்டு, அதனை அழித்தொழிப்பதில் பெரும் வெற்றி பெற்று, காலத்திற்கேற்ற தமிழ்நடையை உருவாக்கியது. தமிழ் உரைநடையில், நடை பேதங்களையும், படைப்பு முறையில் ஒருமையையும் மணிக்கொடி எழுத்தாளர்கள் கொணர்ந்தனர். கொள்கைப் பிடிப்பும் எழுத்தர்ப் பணமும் (Conviction and devotion) கொண்டு பழமைவாதிகள், தூய்மைவாதிகளது எதிர்ப்பை முறியடித்து, தமிழ் மொழி வரலாற்றின் பாதையைத் தற்கால இலக்கியப் படைப்பு நடைக்கு முன்னோடியாக அமைத்தனர்.

இவர்கள் பல வேறுபட்ட இலக்கியக் கொள்கைகளும் தத்துவ நோக்கும் அரசியல் பற்றும் உடையவர்கள். கலை