பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானமாமலை

47


கலைக்காகவே' என்ற கலைக் கொள்கையை உடையவர்கள். ஆயினும் படைப்பாற்றல் உடையவர்கள். கதைப் பொருளை நேர்மையோடு எழுதும்பொழுது realist போக்கு தோன்றுகிறது. இலக்கியக் கொள்கைகள் பின்னிழுக்க, வாழ்க்கையார் வம் முன்னிழுக்க, அவர்களது படைப்பாற்றல் முன்னிழுப்பை வலுப்படுத்தியது.

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் முதல் கு.ப.ரா. வரை எத்தனை வகையான படைப்புகளில் ஒவ்வொருவரும் தனித்தன்மையான தமிழ் நடையைக் கையாண்டு தமிழ்நடையைப் பாத்திரப் படைப்பு, உளவியல் வருணனை, சந்தர்ப்ப சூழல், மனித முயற்சியின் வெற்றி தோல்விகள், சமுதாய முரண்பாடுகள், இன்னும் பலவற்றை உருவாக்கிக் காட்டப் பயன்படுத்தியுள்ளார்கள். இவர்களுடைய நடைகளும் படைப்பு முறைகளும் அறிவியல் முறையில் ஆராயப்படவேண்டும். தற்கால Stylistics முறை களைப் பயன்படுத்தி ஆராய இளைஞர்கள் முன் வரவேண்டும் சொல்லப்படும் பொருள் எதுவாயினும், சொ ற்சேர்க்கை மொழிஅமைப்பு, பேச்சு நடை, எழுத்து நடை வேறுபாடு ஆகிய இவை கருதித் தமிழ் நடையின் வளர்ச்சி, மணிக்கொடி காலத்திற்குப் பின் மிகவும் வளம் பெற்றிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் நடை

திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் கருத்துப் போக்கு இவை பற்றி ஆராய்வது இந்நூலின் நோக்கமன்று. ஆயினும் அவ்வியக்கத்தின் நோக்கம் பற்றி அறியாமல் அதன் தடையின் தன்மையைக் குறித்துக் கருத்துக் கூற முடியாது. எனவே அதன் நோக்கம் பற்றி மிகவும் சுருக்கமாக இங்குக் குறிப்பிடுவோம்.

தேசிய இயக்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையைத் கண்டு அஞ்சிய நிலவுடைமைத் தலைவர்களும் ஆட்சி இயந்திரத்தில் பிராமணர்களுடைய செல்வாக்குக் கண்டு தமது ஆதிக்கத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்பிய நடுத்தர வர்க்கத்தின் மேல்தட்டுப் பகுதிகளும் பழமையின் ஆதிக்கத்தை எதிர்த்த மிகச் சாதாரண சமூகப் பகுதிகளும் இவ்வியக்கத்தை ஆதரித்தனர்.

இவர்களில் நிலவுடைமை நலன்களுடைய சிறு பகுதி மக்கள் ஆதரவைப் பெற்றுத் தமது சமூக அஅடித்தளத்தை விரி