பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

49


மாகவும் மலர்ந்தது. இவர்கள் பழுத்த சைவ சித்தாந்தவாதிகள். நாத்திகத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள், புலமை நடையை விரும்புபவர்கள். தமிழின் மேன்மையை மற்ற மொழிகளின் மேன்மைக்கு அதி ம க மதித்தவர்கள் எனவே இவர்கள் ஈ.வெ.ரா.வின் நாத்திகக் கருத்துக்களையோ சோவியத் ஆதரவுப் பிரச்சாரத்தையே விரும்பவில்லை, இவர்கள் பிராமண எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, புராண எதிர்ப்பு ஆகியவற்றிலேயே அவரோடு சேர்ந்து நின்றனர்.

சமூகச் சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கப்பட்ட சுய மரியாதை இயக்கம், பிராமணர் அல்லாதார் இயக்கமாக அரசியல் வடிவம் பெற்றது. நிலப்பிரபுத்துவ நலன்களைப் பாதுகாக்கும் ஜஸ்டிஸ் கட்சியும் இதனோடு ஒன்றானது. தலைமைக்கும் மக்களுக்கும் முரண்பாடுகள் தோன்றின. ஈ.வெ.ரா. படிப்படியாக் மக்களது தீவிர இயக்கத்தை நிலப்பிரபுத்துவத் தலைமையின் விருப்பங்களுக்கு இணங்கி நடக்கச் செய்தார்.

இவ்வியக்கத்தின் அரசியல் போக்குகளால் இதன் தலைவர்களின் தமிழ் நடையில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது தனியாக ஆராயப்படவேண்டிய ஒரு பொருளாகும்.

திராவிட இயக்கத்தில் பல வர்க்கப் பகுதிகள் சேர்ந்து இயங்கிய காரணத்தால் அவர்களது கருத்து வெளிப்பாடுகள் தமிழ் நடையில் வேறுபட்டன.

இல்வியக்கத்தைச் சில அடிப்படைக் கொள்கைகளின் மீது ஆதாரப்படுத்துவதற்குத் திரு. அண்ணாதுரை முயன்றார். முரண்பட்டிருக்கும் வர்க்க நலன்களின் போராட்டங்களைச் சமரசப்படுத்த அவர் முயன்றார். ஆயினும் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் என்ற கருத்தோட்டங்களின் சுமையைத் தாங்கிக்கொண்டே திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழியர்கள் தமிழிலக்கிய அறிவையும், ஈ.வெ.ரா.வின் ஆரிய-திராவிடர் கருத்தையும் இனைத்தனர். ஈ.வெ.ரா.வின் இயக்கத்தில் பற்பல கருத்துப் போக்குடையவர்களும் தத்தமக்கெனத் தனித் தனித் தமிழ் நடைகளை வகுத்துக்கொண்டார்கள். ஆனால், அண்ணாதுரை ஒரே வகையான தமிழ் நடையின் மூலம் பலவிதமான போக்குகளைச் சமரசம் செய்து வைத்தார். ஆதே போக்கைத்தான் எல்லாத் தி.மு.க. தலைவர்களும் பின் பற்றுகிறார்கள். ஈ.வெ.ரா. பின்பற்றிய பேச்சு ந ையையும் தமிழிலக்கியச் செய்திகள் கொண்ட பேச்சு தடை க்கு மாறான எளியத் தமிழ் தடையையும் அவர்கள் கையாண்டனர்.

33/4