பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

உரைநடை வளர்ச்சி


இரு தன்மைகளும் கலக்க, அவைகளை எடுத்துச் சொல்வதில்தான் அவனது சிருஷ்டி சக்தி இயங்குகிறது. ஆகவே அவன் கதை பின்னுகிறபோது இவற்றை வருணிக்கிற ஒரு போக்கில் ஈடுபட்டு விடுகிறான். அவனது நடை வருணனை நடையாகி விடுகிறது. (செல்லப்பா, இன்று தேவையான உரைநடை-தமிழ் இலக்கிய விமர்சனம் என்னும் நூல்

இது ஒரு வகை உரைநடை எழுத்து. இதனைப் படைப் பாளி தடை என்று கூறலாம். இதில் மொழி, சூழல், பாத்திரம் இவற்றை உருவாககுவதில் அழகியலும் (Aesthetics) சம்மந்தப்படுகிறது.

படைப்பு நடை தவிர விளக்கவுரை நடையும் ஆராய்ச்சி தடையும் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. இதில் இலக்கியம் பற்றிய விசாரணை அல்லது ஆராய்ச்சியில் பயன்படுத்தப் படும் நடையு , இலக்கியமல்லாத மற்றத் துறைகளின் கருத்து விளக்கத்தில் பயன்படுத்தப்படும் நடையும் அடங்கும். ஜானகிராமனையோ, ஜெயகாந்தனையோ இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளைக் கொண்டோ அல்லது மனிதவியல் கொள்கைகளைக் கொண்டோ, அறிவு மட்டும் கலக்க ஒருவன் ஆராய்கிறபோது, அவற்றை விளக்குவதில் அவன் ஈடுபடுகிறான் (Study of writer). அவன் நடை, விளக்க நடையாகிவிடுகிறது.

இலக்கிய விமர்சன நூல்கள் (செல்லப்பாவின் தமிழில இலக்கிய விமர்சனம் போன்றவை), இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் (வையாபுரிப்பிள்ளை, இராசமாணிக்கனார், தெ.பொ.மீ., சாமி சிதம்பரனார், மயிலை சீனி.வேங்கடசாமி, நா. வானமாமலை, ரகுநாதன் போன்றோரது நூல்கள்) இவ்வகையில் அடங்கும். தற்காலத்தில் ஆராய்ச்சி இதழ் தொடங்கப்பட்ட பின்னர், இலக்கியம் தவிர வேறு புதிய புதிய துறைகளில், ஆராய்ச்சி வளர்ந்துள்ளது.

மானிடவியல், சமூகவியல், வரலாற்றியல், புனைகதையியல் (mythology) போன்ற அறிவுப் படைப்புத் துறைகளின் அறிவை, தமிழ்நாட்டின் நிலைமைக்கேற்பப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் பண்பாட்டையும் ஆராயும் கட்டுரைகள் தமிழுக்கே புதிதாக வெளிவருகின்றன. இவை தத்துவ கனம், தர்க்க நீதியான வாதம், தன் கருத்துக்கு எதிரான வாதங்களைச் சான்றுகள் கொண்டு நிராகரித்து தன் கருத்து நிறுவுதல் ஆகிய தன்மைகள் கொண்டவை. சமய வாதங்களில் இதுபோன்ற முறை, கையாளப்பட்டிருப்பினும், இன்று தமிழுக்குப் புதிய துறைகளில் இம்முறை புகுத்தப்பட்டுள்ளது. எனவே