பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

57


ஆராய்ச்சியில் ஆய்வுக் கட்டுரைகளில் ஒரு புதிய தமிழ் நடை வளர்ந்துள்ளது. இது விளக்கவுரை நடை என்றழைக்கப்படும். பாரதி தான் இத்தகைய நடையை முதலில் பயன்படுத்தினார். திரு. வி.க. இதனைப் பெரிதும் வளர்த்தார். திரு.வி.க.வின் தெளிவான, பண்டித நடையை எளிதாக்கி அவருக்குப் பின் தோன்றிய கட்டுரையாளர்கள் எழுதினார்கள். வ.ரா. இப்போக் கில் முக்கியமானவர். மு.வ. தாம் புகழ்பெற்ற தமிழரறிஞராயிருந்தும் பண்டித நடையைக் கைவிட்டு மிகவும் எளிய நடையில் பல துறைகளில் கருத்துக்களை வெளியிட்டார். அவரது படைப்பு இலக்கியங்களில்கூட அவர் கட்டுரை நடைத் தமிழைப் பயன்படுத்தினார். இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் ஆகிய துறைகளில், எளிய பேச்சு நடைக்கு நெருங்கிய தமிழை அவர் கையாண்டார். இலக்கிய ஆராய்ச்சியில் அவருடைய கருத்துக் களை, சிறுசிறு வாக்கியங்களில், சிந்தனையோட்டம் அறுந்து போகாமல் அவர் வெளியிடுகிறார்.

படைப்பு இலக்கியம், உணர்ச்சிக்கு விருந்தாகி, நம் மனத்தில் நம் உலகையும் வாழ்க்கையையும் பற்றிய உண்மையான அல்லது பொய்யான படிமங்களைத் தோற்றுவிக்கிறது.

கருத்து விளக்கத் துறைகள், அறிவைச் சுடர் விட்டெரியச் செய்து, நமது பொய்யான கருத்துக்களை அழித்துப் புதிய உண்மையான கருத்துக்களை நம் மனத்தில் தோற்றுவித்து வளர்க்கின்றன. நமது பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்து, ஆராயப்படாத விஷயங்களையும் ஆராயத் தூண்டுகின்றன.

ஆராய்ச்சிக் கருத்துக்களை விளக்கப் பயன்படுத்திய கடினமான நடையைக் கைவிட்டுத் தெளிவும் நுட்பமும் மிக்க நடையை 'ஆராய்ச்சி'ப் பத்திரிக்கையில் நூற்றுக் கணக்கானவர்கள் கையாண்டனர். பொருள்களனைத்தும் தமிழுக்குப் புதியவை. சமூகவியல், மானிடவியல் பின்னணியில் தமிழர் பண்பாட்டை அளவீடு செய்யும் முயற்சிகள் முதன் முறையாகத் தொடங்கின. இதற்குத் தெளிவான ஆனால் இது வரை பயன்படுத்தப்பட்ட மொழி நடையினின்றும் வேறானதோர் நடை தேவையாயிருந்தது. புதிய பொருளை விளக்க வந்த ஆராய்ச்சியாளர்கள், புதிய நடையையும் படைத்தார்கள்.

எடுத்துக்காட்டாகப் பொன்னீலன், தோள்சேலைப் போராட்டம் என்ற கட்டுரையில் முடிவுரையாகக் கூறுகிறார்:

இது நாஞ்சில் நாட்டு ஆழைக்கும் மக்களின் ஓர் பகுதியினரான தாகூார்கள் தம்பை அடிக்கும் காதீய,