பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

உரைநடை வளர்ச்சி


இத்தகைய நடைக்கு வகை மாதிரியாக பி.எல். சுவாமியின் ‘சாத்தன் வழிபாடு' என்னும் கட்டுரையில் இருந்து ஒருபத்தியை மேற்கோளாகக் கொடுப்போம். சாத்தன் தமிழ்நாட்டில் நிகழ்ந்த பண்பாட்டுக் கலப்பின் காரணமாக உருவான ஒரு படிமம் இதனை சுவாமி இவ்வாறு கூறுகிறார்:

சாதவாகனர் காலத்தில் சாத்தன் என்ற தெய்வம் வீரவணக்கத்தின் அடிப்படையில் தோன்றியதென்று தெரி கிறது. இந்த தெய்வம் பழங்குடி மக்களின் தெய்வமாக இருந்து, பழங்குடி மக்களின் தாய்த் தெய்வத்தின் மகனாக வும் கருதப்பட்டது இத்தெய்வத்தை சமணரும் புத்தரும் தங்கள் தெய்வமாக ஆக்கினர். பிறகு சைவரும் சாத வாகனனைத் தெய்வமாக ஆக்கிப் புராணங்களைப் படைத்தனர், சிவனைத் தந்தையாக்கி, காளியையும் பார்வதியையும் காமாட்சியையும் தாயாக்கினர். சிவபெருமான் மகன்களில் குமரன், வினாயகன் ஆகியோருடன் சாத்தனும் மகனாக்கப்பட்டான். இன்று கிராமங்களில் காணப்படும் ஐயனார் வழிபாட்டில் பழங்குடி மக்களின் சாதவாகனன் வழிபாடும் சைவரின் சிவபெருமான் மகன் வழிபாடும் கலந்திருப்பதைக் காண்கிறோம்.

(ஆராய்ச்சி 16, ப. 16:)

அறிவியல் துறைகள் அண்மைக் காலத்தில் மிக வளர்ச்சி யடைந்துள்ளன. முதலில் தத்துவத் துறையில் கற்கப்பட்ட அறிவியல்கள் தனித்தனியே இயைபியல், பெளதீகம், வேதியல் (Chemistry), தரை இயைபு இயல், தரை வேதியல், உயிரியல் எனப் பிரித்துக் கற்கப்பட்டன. பல மொழிச் சொறகளும் இவற்றின் அருங்கலைக் களஞ்சியங்களில் இடம் பெற்றன. இதன் பிறகு விண்பயணக் கருவிகள் தோன்றிய பின்னர், பல் அறிவியல்களுக்கிடையே இருந்த பிரிவுக் கோடுகள் அழிந்தன. பல அறிவியல்கள் இணைந்து ஒரு பொருளைக் கற்றுக் கொள்ளும் இணைப்பு முறை தோன்றியது.

அறிவியல் துறைகளை வரையறை செய்து முதலில் தோன்றிய நூல் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய 'நூல் விளக்கம்’ என்பதாகும். என்னென்ன பொருள் பற்றி எந்தெந்த அறிவியல் நூல்கள் விளக்குகின்றன என்ற விளக்கம் இந்நூலில் தரப்படுகிறது. இதன் பின்னர் பள்ளிகளில் தமிழில் அறிவியலின் தொடக்க அறிவு கற்பிக்கப்பட்டது. கலைச்சொற்களை இந்தியா முழுவதற்கும் சம்ஸ்கிருதத்திலேயே உருவாக்கினார்கள். அவை வடமொழிப் பயிற்சியில்லாத தென்மொழி பேசு வோருக்குப் புரியாததாகவும் உச்சரிக்கக் கடினமாகவும் இருந்தன. இதனால் தமிழிலேயே சொற்கன் புனையப்பட்டன.