பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

63


மொழிபெயர்ப்பில் கருத்துக்கள், நடையைக் கட்டுப்படுத்து இன்றன. மூலமாக இருந்தால் சிந்தனையே நடையை வழிப்படுத்தும். மூலநூல்கள் பல சமூக அறிவியல் துறைகளில் தோன்றவேண்டும். பழமையில் உரைநடை காலத்திற்கேற்ப மாறி வந்துள்ளது. இன்று படைப்பாளியும் ஆராய்ச்சியாளனும் தனக்கு முன்

படைக்கப்பட்டுள்ள அத்தனை வித உரைநடைகளையும் மனதில் கொண்டு தனக்கு உபயோகமாகக் கூடிய அளவு போக, போதாததற்கு சோதனை நடத்தி உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான்.

(செல்லப்பா)

இவ்வாறாக மொழி மாறிக் கொண்டே செல்வதுதான் மொழியின் இயல்பு. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பது சொல் பற்றிய வழக்கு என்று மட்டும் எடுத்துக் கொள்வது சரியல்ல. எல்லா வழிகளிலும் மொழி மாறிக் கொண்டே செல்லும். காலம் பற்றிய வழக்கு வேறுபாடு என்று மட்டும் கொள்வது சரியல்ல. பிரதேசம் பற்றியும் சமூகத்தின் ஜாதி பற்றியும், தொழில் பற்றியும் ஒரே காலத்தில் வழக்கு வேறுபடுதல் உண்டு. இந்த உண்மையை நன்றாக உணர்ந்து தற்காலத்துக்குரிய தமிழின் இலக்கணத்தையும், சொல் முதலிய வழக்குகளின் அகராதியையும் இயற்றுதல் இன்றியமையாதது

என்று வையாபுரிப் பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்கள்.

தூய தமிழ் என்பது சம்ஸ்கிருதம் போல, மேலோர் (பண்டிதர்) மொழியாகத் தமிழை ஆக்கி, அதனைத் தமிழ் மக்கள் மீது சுமத்துகிற முயற்சியாகும். இது சம்ஸ்கிருதம் போலத் தமிழையும் வழக்கொழிந்து போவதற்குத் தம்மையறியாமலே தூய தமிழ்வாதிகள் செய்கிற முயற்சியாகும். நகரங்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் பல சாதிகளைச் சேர்ந்தோர், கூடி வாழ்வதற்குரிய வாய்ப்பை அளிக்கிறது. உதாரணமாகச் சென்னை, மதுரை, கோவை போன்று பல மாவட்ட மக்கள் சேர்ந்து பணிபுரிகிற நகரங்களில் இந்த வாய்ப்பினால் வட்டார மொழி வேறுபாடுகள் குறைகின்றன.

படிப்புப் பரவி வருகிறது. அது மேலும் எழுத்தறிவைப் பெரும்பான்மையான மக்களுக்கு அளிக்குமானால் இன்னும் அதிகமாக வட்டார வேறுபாடுகள் குறைந்து, Standard Spoken Tamil உருவாகும். இப்பொழுதே உருவாகிவிட்டது என்று நான் சொல்லவில்லை. பல வேறுபட்ட வழக்குத்