பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

நூல்களிலிருந்து இந்த நூலையும் தனியாகப் பிரித்துக் காட்டுகின்றன.

இது உரைநடை வளர்ச்சி பற்றிய விளக்கமான-விரிவரன நூல் அல்ல என்றாலும், விரிவான-விளக்கமான நூலுக்கான குறிப்புகளாக அமைந்திருப்பதால், தமிழ் உரைநடை வளர்ச்சியினை ஆராய்வோருக்கும் கற்போருக்கும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் அடிப்படைகளை அறிந்துகொள்ளப் பெரும் துணையாக அமையும் என்று நம்புகின்றோம்.

கலை, இலக்கியம், வாழ்வியல் போன்ற வாழ்க்கையறிவியல்களை மார்க்சீய நோக்கில் ஆராயும் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் பல்வேறு துறைகளைப் பற்றிய நூல்களை எழுதியுள்ளார்கள். அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடிய இந்த ஆய்வுகள் அடிப்படைகளை அறிந்துகொள்ளவும் ஆய்வு முறைகளைத் தெரிந்துகொள்ளவும் மிகவும் பயன்படுவனவாக அமைந்திருக்கின்றன.

இவற்றை வெளியிடத் தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் பேராசிரியர் அவர்களுக்கு இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. அறுபது நிறையும் மார்க்சீய ஆய்வுப் பேரறிஞர். பேராசிரியர் நா.வா. அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவரது பத்து நூல்களை அச்சிட மக்கள் வெளியீடு ஏற்பாடு செய்துள்ளது.

ஆய்வுப் பேரறிஞர் நா. வா. அவர்களின் பணி சிறக்க-மேலும் அவர்களிடமிருந்து பல்வேறு துறைகளில் வழிகாட்டுதல் பெறத் தமிழ் மக்களின் சார்பில் மக்கள் வெளியீடு விழைகின்றது.

மே. து. ராசு குமார்
இரண்டாம் அச்சுக்கான பதிப்புரை

பேராசிரியர் நாவா அவர்களுடைய மற்றொரு நூல் தற்போது மறு அச்சாகிறது. அவர்களுடைய முழுமையான தொகுப்பு நூல்களை வெளியிடுவதில் ஏற்படும் சுணக்கத்தில், ஒரு தலைமுறையின் பார்வையிலிருந்து இத்தகைய படைப்புகளை மறைத்து வைத்துவிடக் கூடாது என்பதாலேயே, முன்னர் வெளிவந்தவாறு இந்நூல்களை வெளியிட முடிவு செய்தோம்.

உரைநடை வளர்ச்சி என்பது ஒருமொழியின் தனிக்கூறு அல்ல. அந்த மொழியைப் பேசும் மக்களினத்தின் சமூக