பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு பிள்ளை, நாட்டார் இருவர் வரலாறு முடியும் நிலையிலுள்ளது. காசு. பிள்ளை வரலாறு தொடங்குகிறேன்." . - புலவர் ஒளவையவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பணியேற்பதற்கு முன் 21-6-1943இல் ஆரணியிலிருந்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது அவர்கள் நன்றியுணர்வினைக் காட்டுகின்றது. . ‘அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து உத்தரவு இன்று வந்தது. இதற்குத் தோன்றாத் துணையாய் உள்ளிருந்து ஆவன புரிந்த அருளண்ணல் நம் அருமைப் பண்டித மணியவர் களே என்று நண்பர்களால் அறிய, அதற்கு உள்ளுறு துணை செய்த தங்கள் நன்றியினை யான் சிறிதும் மறத்தற் கில்லேன்.” உரைவேந்தர் ஒளவையவர்கள் மணிவிழா 1962, 63இல் மதுரையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. யான் அதில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாது போயிற்று. எனவே, நெல்லையில் 1964 ஏப்பிரல் 12ஆம் நள் ஆறாவது சிற்றிலக்கிய மாநாட்டையொட்டி உரைவேந்தர் அவர்கள் மணிவிழாவைச் சிறப்பாக நடத்தத் திட்டம் வகுத்து அழைப்பிதழ் அனுப்பப் பெற்றது. முதல் நாளே நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு சந்திரசேகரன் அவர்களைக் கண்டு புலவரவர்கட்குப் பொன்னாடைபோர்த்தி வாழ்த்துமாறும், மாவட்டத் தலைமைக் கல்வி அதிகாரி திருவாளர் கே.ஆர். மாணிக்கம் அவர்களைக் கண்டு பொற்கிழி வழங்குமாறும் வேண்டிப் புலவரவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைக் கொடுத்து வந்தேன். “நெல்லையிலிருந்து நேற்று நண்பகல் இங்க வந்து சேர்ந்தேன். மணிவிழாச் சிறப்பு இனிது நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்திரசேகரன் அவர்கள் கழகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்திப் பாராட்டினர்; கல்வித் துறை ஆய்வாளர் (Divisional Inspector) திருகேஆர். மாணிக்கம் அவர்கள் தங்கள் உள்ளன்பின் உருவாய் பொற்கிழி வழங்கிப் புகழ் புரிந்தார். சைவத்திரு மாணிக்கவாசகம் பிள்ளை அவர்கள் பாராட்டு மலரைப் படித்தளித்தார். பேராசிரியர் அருளப்பன், புலவர் நவநீதகிருட்டிணன் முதலியோர் பாராட்டி யுரைத்தனர். எல்லாம் மிக்க சிறப்புடன் நடைபெற்றன. எனினும், நீங்கள் இல்லாமை எனக்குப் பெருங்குறையாக இருந்தது. எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இன்னாமை காரணமாக நீங்கள் இல்லாமை நேர்ந்தது எனது தவக்குறை. -. - - "கால வேற்றுமையால் கருத்து வேற்றுமை தோன்றுவது. இயல்பு; எனினும், உள்ளத்தில் தோய்ந்து ஊடுருவி நிற்கும்