பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! fi உண்மையன்பு ஒருவாற்றானும் மாறாது என்னும் உயரிய உண்மை உங்கள் பால் ஒளிவிட்டுத் திகழ்வது காண என்மனம் நீராய் உருகி விட்டது. செந்தமிழ்ப் பெருந்தொண்டும் சீர்த்த மனப்பண்பும் உருக்கொண்டாற் போல் விளங்கும் உங்களது தூய அன்பு நினைக்குந்தோறும் எனக்குப் பெரியதோர் இறும்பூது நல்குகின்றது. அதனால் என் உள்ளத்திற் பிறந்த நன்றியுணர்வு என்னுயிரோடே கிடந்து பின்னிப் பிணைந்து நிற்கிறது. - - - 'அன்று உங்கள் அருமையண்ணலின் அன்பிற் பிணிப்புற்ற என் தமிழறிவு உங்களது உயரிய துய நட்பால் சிறந்து நீங்கள் அன்பு கனிந்து பாராட்டுமளவை அடைந்தமைக்குக் காரணம் நீங்களே என்பதையும் நான் மறவேன்; மறந்தால் கெடுவேன் என்பதையும் நான் நன்கறிவேன். செந்தமிழ்த்தாயின் திருவருளால் உங்கள் பணி சிறந்து மேன்மேலும் உயர்வதாக, தமிழறிஞர்கட்கு வாழ்வளிக்கும் உங்கள் உள்ளம் பனிபடு இமய மால்வரையினும் பெரிது; நிலத்தினும் பெரிது; நீரினும் ஆரளவின்று. அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயண்ணல் திருவருளால், அவனது.அருள்போல் பெருகிய வையை மணலினும் பல்லாண்டு வாழ்க’ என்ற கடிதம் நினைவில் நிற்கிறது. - புலவர் ஒளவையவர்கள் எழுதிய “சைவ சமய இலக்கிய வரலாறு வரலாற்று நூல் வரிசையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால் வெளியிடப் பெற்றுள்ளது. பழைய உரையோடு கூடிய "ஞானாமிர்தம்’ என்னும் சைவ சமய நூலைப் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து விளக்கக் குறிப்பு எழுதியுள்ளார். அதுவும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாகப் பதிக்கப் பெற்றுள்ளது. . . . . . . . புலவரவர்கள் ஏட்டுச் சுவடிகளைப் படிப்பதிலும், கல்வெட்டுகளை ஆராய்வதிலும் பயிற்சி நிரம்பியவர்கள். எதனையும் விரைந்து கற்றுத் தெளிவு பெறும் ஆற்றலும், கற்றுத் தெளிவு பெற்றதை விரைந்து எழுதும் வல்லமையும் கைவரப் பெற்றவர். அவர் கையெழுத்து ஒரே போக்காக அச்சுக் கோப்பவர்க்கு மயக்கம் ஏற்படா வகையில் அமைந்திருக்கும். சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் முதலிய மெய்கண்ட சாத்திர நூல்களைத் திருமடங்களிலும் சைவப் பேரவைகளிலும் முறையாகப் பாடஞ் சொல்லி விளக்கும் மாட்சியுடையவர். - --