பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கற்றோர்க்குக் கலங்கரை விளக்கம்! முதுபெரும் பேராசிரியர் டாக்டர் சைவே. சிட்டிபாபு (முன்னாள் துணைவேந்தர் மதுரை காமராசர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகங்கள்) உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு செப்டம்பர் திங்களில் நடைபெற உள்ளது என்பதை அறிய மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். பண்டை உரையாசிரியர்களாகிய நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், சிவஞான முனிவர் போன்ற வித்தகர்களோடு வைத்தெண்ணக் கூடியவர் உரைவேந்தர் ஒளவை.துரைசாமி பிள்ளை. இவரோடு நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பை நான் பெறாவிடினும், இவரது ஆழ்ந்த புலமையை என் இலக்கிய நண்பர்கள் புகழ்ந்து பாராட்டுவதைக் கேட்டு வியந்துள்ளேன் மற்றும் என் இனிய நண்பர் டாக்டர் ஒளவை நடராசன் அவர்களின் திருத்தந்தையார் இவர் என்று நினைக்கும் போது என் உள்ளம் பெருமை கொள்கிறது. ஒளவை துரைசாமி பிள்ளை அவர்களால் புறநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, மணிமேகலை போன்ற பெரு நூல்களுக்கு எழுதப் பெற்ற நயஉரைகள், வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய செய்திகள் எல்லாம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும். பாடல் தோறும் விளக்கம்’ என்ற தலைப்பில் காணப்படும் செய்திகள் ஆய்வாளர்கட்கும் புலவர்கட்கும் ஒரு கருத்துக் களஞ்சியமாகப் பயன்பட்டு வந்துள்ளது தமிழ் இலக்கிய உலகு அறிந்த ஒன்றாகும். இவரது தன்னிகரற்ற உரைகளுக்காக இவரை உரைவேந்தர் என்று இலக்கியச் சான்றோர்கள் புகழ்ந்து பாராட்டியதை யாரும் மறக்க முடியாததாகும். - தமிழ்ப் பெரும் புலவர்களின் சீர் சால் பீடமான அண்ணாமலை பல்கலைக் கழகம் ஒளவை துரைசாமி பிள்ளையைத் தமிழ்த் துறையில் சேர்த்துக்கொண்டு பெருமையுற்றது. அங்கிருந்த காலைதான் அவர் சைவ சமய இலக்கிய வரலாறு எனும் அருமையான நூலினை எழுதி வழங்கினார். இதோடு சைவ சமயப் பெருநூலான ஞானாமிர்த நூலை ஆய்ந்து விளக்கம் எழுதினார். இதற்காகவே “சித்தாந்த