பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


iG உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு பணியேற்ற சில நாட்களுக்குள்ளேயே பிள்ளையவர்களின் புகழ் வெள்ளமென எங்கும் விரைந்து பரவலுற்றது. பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், நகர அறிஞர்களும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பாராட்டிப் பேசலானார்கள். ஏற்ற ஆசிரியரை எய்தப் பெறாமல் ஏக்கமுற்றிருந்த யான் ஊக்கம் பெற்று அவரை நேரில் ஆய்ந்தறியத் தொடங்கினேன். அவர் பிறரோடு பழகும் பண்பையும், பள்ளியில் பாடம் நடத்தும் பாங்கையும் கவனித்தேன். உரையாற்றும் அவைகட்குச் சென்று அவர் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த தகுதிகள் யாவும் அவரிடம் ஏற்றமுற நிறைந்திருப்பது கண்டு, என் தமிழ்ப் பசியைத் தணிவிக்கும் தகவுடையார் அவரே எனத் தெளிந்து, அவரை அணுகி என் விருப்பத்தைக் கூறி வேண்டிக் கொள்ளத் துணிந்தேன். - பூவேத்தப் பழஞ்சைவப் பயிர்விளைத்த புகழ்ப்பிள்ளை நாவேத்தத் திருவோத்துர் நயந்தேற்றா ரருள் செய்வென் வரைசாமி யரங்கமென மகிழ்ந்தாடு மனத்தெளவை துரைசாமி! அருந்தமிழன் சுவைகனிந்த புலவ! கேள் உலகுவளை கடல்மடுத்த வொருமுனியு மாற்றாமே விலகு தமிழ் வியன்கடலை வியப்புறுமா றுண்டனைநீ! உற்றுயர்வான் கலையனைத்து முரைகுற்ற மூன்றுமறக் கற்றுயர்வான் வருமவர்க்குக் கற்பகம்போனின்றனை நீ! சொல்வன்மை யஞ்சாமை சோர்வின்மை யொடுவாதில் வெல்வன்மை யும்முடைய வித்துவச் சிகாமணி நீ! கம்பர்கவிக் கவினையுமுட் கரந்தமைந்த பொருட்சுவையு மிம்பருனைப் போலெவர்மற் றினிதறிந்தார்? - எடுத்துரைத்தார்? பன்மொழிக்குந் தாயாகிப் பரந்துலவுந் தமிழ்க்கன்னி நன்மொழிக்கு நாயகனாய் நவிறலுநிற் குயர்வேயோ! குன்றளிக்குங் குமரனருள் கொழுந்தமிழை யன்றேபோ லின்றளிக்குந் தலைவனி யெனலு நினக்கிசையேயோ! அஃதன்று ஒயா தொழுகுஞ் சேயாற் றடைகரை விளங்கு மோத்தூர் வியனக ருயர்நிலைப் பள்ளி மாணவர் கள்ள மின்றி . யாற்றிய தவத்தி னாசிரியத்தொழி லேற்றவர்தம்மட மாற்று மொண்புலவ! சிறியேன் தமிழிற் பேரவாக் கொண்டு