பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இணையற்ற உரைவேந்தர்! - கவியரசியார் திருமதி செளந்தரா கைலாசம் அருந்தமிழின் மூத்தமகன் ஒளவை தந்த அமுதமொழிக் கவிதைகளை மாந்த ரெல்லாம் விருந்தாயும் மருந்தாயும் ஏற்றுக் கொண்டு மேன்மையினை எய்தினரென் றுரைத்தால் உண்மை! பெருந்தனமாய் இந்நாளும் அவைவி ளங்கிப் பேருலகம் சரியான தடத்திற் செல்லச் சிறந்தவொரு துணையாகத் திகழ்வதாலே சீருக்கும் பேருக்கும் குறைவே இல்லை! அருமையுள தமிழ்ச்சங்க நூல்க ளெல்லாம் யாவருமே கற்றறிதல் வேண்டும் என்று கருதியதால் மிகத்தெளிவாய் உரைசெய் திட்டார்! கவினுடைய காவியங்கள் ஆய்ந்துரைத்தார் பெருமைமிகும் இராமலிங்க வள்ளல் தந்த பேசரிய திருவருட்பா உரையும் கண்டார்! விரிவுலகம் முற்றிலுமே வியந்து போற்றும் வித்தகராம் ஒளவைதுரை சாமிப் பிள்ளை' ஆசிரியப் பணியாலே இளைஞ ரெல்லாம் அறிவோடும் ஆற்றலொடும் வாழ வைத்தார்! பேசுகின்ற திறனாலே தமிழர் நெஞ்சில் - பிறங்குமொரு தனியிடத்தில் அமர்ந்து கொண்டார்! நேசமிகும் உளத்தாலே எந்தப் போதும் நீலமணிமிழற்றானைத் தொழுதி ருந்தார்: வாசமுறு நற்றமிழே உயிராய் எண்ணி மாசறியாப் பொன்னேபோல் வாழ்ந்தி ருந்தார்!