பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


r I விலை : ரூ. 5.00 உரைவேந்தர் பற்றிப் பாவேந்தர்! அவ்வை துரைசாமிப் ിഞ്ഞ് அருந்தமிழின் செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ - இவ்வையம் எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள் சிக்கலின்றித் தந்தான் தெளிந்து. புறத்தின் உரைகள் புலமைத் திறமை வரலாறு பேசும் மகிழ - உறவாடும் பாட்டின் குறிப்பெல்லாம் பண்பாட்டுச் சங்கத்தேன் கூட்டில் விளையும் கொடை. நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு. இரவுபகல் தானறியர்ன் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய் நாட்டுமக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு - பள்ளிமுதல் பல்கலைச் சால்ைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை - வெள்ளத்தேன் பாயாத ஊருண்டா? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்