பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புகழ்ப்பொலிவேடு! 41 குறைபாடின்றி இனிது வாழ்தல் வேண்டும்; நாட்டில் வறுமை தோன்றின்,(நாட்டவர் மனத்தே நல்ல எண்ணங்கள் வற்றிவிடும்) நல்லறிவு மாயும் என்று அஞ்சி, அவன், “செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கட் செல்வம்” என்று பிறர்க்கென வாழ்தலைப் பொருளாகப் பேணி வாழ்ந்து வந்தான். தான் ஈட்டிய பொருளைத் தானும் ஏனைத் தமிழ்மக்களும் பிறரும் பெற்று இன்பவாழ்வு நடத்தவேண்டும் என விரும்பும் அத் தமிழ்மகனுக்கு வேறொரு கடமையும் உண்டாகின்றது. நாட்டுக்குப் பகைவரால் உண்டாகும் கேடும் அச்சமும், வாழ்க்கையின்பத்தைச் சிதைக்கும் என்ற எண்ணங் கொள்கின்றான். அதனால், தன் நாட்டிற் காவல் குறித்துப் போர் செய்தற்கும், பிற வினை செய்தற்கும் அவன் உள்ளம் கொண்டு, அது குறித்து வினை செய்வதும் கடமை என்பதை உணர்கின்றான். தான் இளமையிற் பெற்ற கல்வி, நாட்டின் நலம் கருதிச் செய்வன செய்தற்குப் போதிய துணை செய்யாமை கண்டவழி, நிரம்பிய கல்வி பெறுவதும் கடன் என்று தெளிகின்றான். ஒரு கால் ஒரு தமிழ்மகன் கல்வி குறித்துப் பிரிந்திருந்தபோது, அவன் பிரிவாற்றாது வருந்திய அவன்றன் மனைமகளிர், வாடைக்காற்றை நோக்கிக் கூறுவாராய், “ஏ, வாடைக்காற்றே, - தமியோர் மதுகை தூக்காய் தண்ணென, முனிய அலைத்தி, முரண்இல் காளை கைத்தொழு மரபின் கடவுட் சான்ற செய்வினை மருங்கின் சென்றோர் வல்வரின், நீ, கரிகாலனோடு வாகையென்னுமிடத்தே ஒன்பது வேந்தர் ஒன்றுகூடி எதிர்த்தபோது, அவனால் அலைப்புண்டு தம் கொற்றக்குடை இழந்த அந்தப் ‘பீடி மன்னர் போல ஒடுவை மன்னால் வாடைநீ எமக்கே’ என்கின்றனர். இங்கே. தமிழ்மக்ன் மேற்கொண்ட கல்வியை, “கைதொழு மரபின் கடவுட்சான்ற செய்வினை” என்கின்றனர். அரசு முறையாயினும், வாழ்க்கை முறையாயினும் அவ்வதற்கு வேண்டிய கல்வியறிவு இல்வழிச் சிறவாது என்பதற்காகக், “காவற் சாகாடு உகைப்போன் மாணின், ஊறின் றாகி ஆறுஇனிது படுமே, உய்த்தல் தேற்றா னாயின்,வைகலும் பகைக்கூழ் அள்ளல்பட்டு - மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே” என்று இளந்திரையன் கூறுகின்றான்.