பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிப்புரை நேற்று வாழ்ந்தவரைக் கூட நினைவில் கொள்ள முடியாத நிலையில் இன்றைய நூற்றாண்டுக் காணும் ஒளவை துரைசாமியின் நினைவு நிரல்களை ஆர்வத்தோடு தொகுக்க முற்பட்டோம். நூல் நலமும் நுணுக்கப் புலமையும் இணைந்த நூற்றுக்கணக்கான கட்டுரைகளைத் தொகுத்துள்ளோம். பழந்தமிழ் நூல்களையும் பயனுள்ள கட்டுரைகளையும் பயில்வார் அருகிவரும் நிலையில் இவற்றை வெளியிடக் கருதுகிறோம். - மணிவாசகர் பதிப்பக உரிமையாளரும் செந்தமிழ்ப் பெரும் பேராசிரியராகவும் திகழும் பதிப்புச் செம்மல் டாக்டர் ச. மெய்யப்பன் அவர்கள் எங்களுக்கு உறுதுணையாக வழிகாட்டி நின்றார். அளவிலும் பொலிவிலும் இந்நூலைப் பெரிதாக்க முயன்றுள்ளோம். தமிழுலகம் இந்நூல் வரவை 5ಲರಿ போற்ற வேண்டுகிறோம். அண்ணாநகர், - ஒளவை துரைசாமி சென்னை - 102, நூற்றாண்டு விழாக் குழு