பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! 49 துணையவிரண்டறு கலப்பின் எம்முடனாய்ப் பேரின்பந்துய்த்து வாழ்வார் இணர்விரைத்த மலர்க்கோதாய் அவர்வடிவே எமக்கினிய கோயிலாமால்” என்று இயம்புகின்றார். சங்கநூற் பெரும்புலவ! சைவநுாற் கலைச்செல்வ தமிழர் போற்றும் துங்கமிகு காப்பியங்கள் மூன்றனுக்கும் ஆய்வுநூல், சுருக்க நூல்கள், நன்குமிகத் தொகுத்தளித்து நலஞ்செய்த பேராசான்! நனிசி றக்க - ஐங்குறுநூற் றெழில்மிகுத்த அரும்பொருள்கள் விரித்துரைத்தோய்! ஐய! வாழி! கேட்டாரைப் பிணிப்பதுடன் கேளார்க்கும் வேட்கை"மிகக் கிளர்ச்சி ஊக்கம் ஊட்டாநின்றறிவுவிருந்துதவுமுயர் பேச்சாள உரன்சிறந்தோய்! நாட்டார்ஐ யாஅவர்கள் நல்லுரையின் குறைநிரப்பும் நலம்செறிந்த ஆட்டான்நீர் ஒருவரெனின், அரியநின் புகழ்நலன்யாம் அளப்ப தெங்ங்ண்? எழுத்தினொடு பேச்சாலும் இனியதமிழ், சிவநெறியென் றிரண்டும் எங்கும் முழக்கிவரும் நாவலனே! முடுக்குமிகு தமிழ்வீறு முதிர்ந்த வீர! - ஒழுக்கநெறி இழுக்காதோய்! உரைப்புமிகு கொள்கையினாய்! உவந்தே யாங்கள் எம்.நன்றி அளவொன் றின்றால்! அழைக்கமகிழ்ந் திவண்போந்த அதற்குநினக்கு - ந. ரா. முருகவேள்.