பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைவேந்தர் உரைத்திறம் - தமிழாகரர் நரா. முருகவேள் “மொழிக்கு மொழி தித்திப்பாக இந்நூற்குப் புத்துரை வரைந்துள்ள பேராசிரியர். திரு. ஒளவை. துரைசாமிபிள்ளை அவர்கள், “உழுத சால்வழியே உழுவான் பொருட்டு, இழுதை நெஞ்சம் இதென் படுகின்றதே" எனத் திருநாவுக்கரசர் வருந்திக் கூறியவாறு, உழுதசால் வழியே உழுது செல்லாமல், இப்பத்தாம் பாடற்குச் செவ்விய இனிய பழுதற்ற முறையிற் பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவதாய் எழுதியுள்ள உரைவிளக்கம் சாலவும் பாராட்டற்பாலதாகும். 'வேள்வியிற் கடவுள் அருத்தினை என்பதற்கு யாகங்களைச் செய்து தேவர்களை உண்பித்தாய் என்றும், “உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை என்பதற்கு வேதங்களை ஒதினமையால் தேவருலகிலுள்ள முனிவர்களை இன்புறச்செய்தாய் என்றும், 'இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த' என்பதற்குப் புதல்வர்களைப் பெற்றமையால் நின்குலத்து முன்னோர்களான பிதிர்க்களைக் காப்பாற்றித் தொல்கடன் இறுத்தாய் என்றும் பொருள் கொள்வர் சிலர். அங்ங்ணம் தாம் கொள்ளும் பொருளுக்கு மேற்கோளாகப் பரிமேலழகர் தமது திருக்குறள் உரைக்கண், 'மக்கட்பேறு என்னும் அதிகாரத்தின் தொடக்கத்தில், "இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுஉம் கடன்கள் மூன்றனுள், தேவர் கடன் வேள்வியானும், முனிவர் கடன் கேள்வியானும், பிதிரர்கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படுவதில்லை” என வரைந்திருப்பதனைக் காட்டுவர். பரிமேலழகர் வடமொழி f நூல்கள் வயப்பட்டு உரைத்தமை பொருத்தமாகாது என மறுப்போர்க்கு, அற்றன்று பரிமேலழகர் வடமொழி நூல்களைத் தழுவிக் கூறினரல்லர், அவர்தம் கூற்றுக்குப் பதிற்றுப்பத்தின்கண் உள்ள அரிய இப்பாடலே உரிய சான்றாகும் என மொழிவர். எனினும், மதிநுட்பம் நூலோடுடைய நம்மருமைப் புதிய உரையாசிரியர் அவர்கள், இக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டு உடன்பட இசையாமல், “வாழியாதன் எய்துந்தோறும் களவேள்வி நிகழ்த்திக் கடவுளரை மகிழ்விக்கின்றான்; அறப்போர் புரிந்து துறக்கம் புகுந்த வீரர்களாகிய உயர்நிலை