பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! - 51 உலகத்து ஐயரை, அவர்தம் ஒழுகலாற்றையும் போர்த்திறனையும் குறித்துப் புலவர்கள் முத்தமிழாலும் போற்றுமாறு செய்து சிறப்பித்தலால் இன்புறுத்துகின்றான்; நாடுகாவலிற் பல்லாற் றானும் உதவியளித்துப் பின்னர் முதுமை எய்திய பெரியவர்களைத் தனது இளந்துணைப் புதல்வர்களைக் கொண்டு தொண்டு செய்வித்துப் பேணி நன்றி பாராட்டுதலால் உவகையுறுவித்துத் தொல்கடன் இறுக்கின்றான்” எனச் செவ்விய விளக்கம் செய்து, தக்க சான்றுகளும் தந்து காட்டியுள்ள அருமைப்பாடு, அவர்தம் நுண்மாண் நுழைபுலமும் பன்மாண் தமிழ் நலமும் அறிவிப்பதாகும். தூயதமிழ்த் தோன்றல்! துரைசாமிச் செம்மல்! நீ ஆய அறுபதாம் ஆண்டுநிறை(வு) - ஏயசெய்தி கேட்டுச் சமாஜம் கிளர்மகிழ்ச்சி எய்தியது! மாட்சியமையின் வாழ்க! மகிழ்ந்து. எழுத்தாலும், பேச்சாலும், இன்னபல்பண் ു. வழுத்து தமிழ்த் தொண்டாற்றி மாட்சி-பழுத்துயர்ந்தோய்! சைவசித் தாந்த சமாஜம், நினைப்பெரிதும் மெய்யுவந்து வாழ்த்தும் வியந்து. செந்தமிழின் பேறாம் சிவஞான போதநூல், முந்துசிவ ஞான முனிவருரை, - எந்த விதத்திற் பதித்தால் விளங்கும்! அது செய்தாய்! துதித்தும் மதித்தும் நின் தொண்டு. - - . . . . . . - - ந. ரா. முருகவேள். வாயில் தமிழ்முழக்கம் வாழ்வில் தமிழியக்கம் பாயில் துயில்போதும் பைந்தமிழே - நோயில் படுப்பினும் பண்டமிழின் பண்பார் பணிசெய்(து) எடுத்ததுரை சாமிபுகழ் ஏற்று - . கவிஞர் தி.நா. அறிவொளி