பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு தேங்கோள் இன்னிசைக்கண், தலைமகனது கருத்துச் சென்றமையின், “இணர்துதை மாஅத்த புணர்குயில் என்றும், குயிலின் இன்னிசை, கேட்போர் உள்ளத்தில் வேட்கையை எழுப்பிக் காதலரை நினைப்பித்தல் இயல்பாதல் பற்றிப் ‘புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும் நெஞ்சமென்றும் கூறினான்’ என்பர். இவ்வாறு தொலி நீக்கியபின் பழத்தைச் சுளைகளையாகப் பிரித்துண்டு மகிழ்வது போலப் பாட்டினுள் ஒவ்வொரு கருத்தாக எடுத்து வரன்முறையில் தெளிவுபடுத்துவதும், அத்தெளிவுரையைத் "தென்னுண்தேனில் தேக்கிய செஞ்சொற்”களில் தொடுத்து உரைப்பதும் உரை நடையின் மாண்பாகும். - இவ்வுரையின் இடையிடையே சங்ககால மகக்ளிடையே நிலவிய கொள்கைளையும் வழக்காறுகளையும், கல்வெட்டுக்கள், வரலாறுகள் முதலியற்றிலிருந்து சான்று காட்டி விளக்கம் செய்வது, பெரியதோர் வரலாறு படிப்பது போலும் உணர்வைப் படிப்போர் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. மாலையில் மகளிர் - மனைகளில் விளக்கேற்றி வழிபடுவது, பிறந்த மகனைத் தந்தை சென்று காண்பது, இளமகளிர் தைந்நீராடுவது முதலிய வழக்காறுகள் உரிய வகையில் விளக்கப்படுகின்றன. ஒளவையவர்கள், சமய நூற் புலமையால் "சித்தாந்த கலாநிதி" என்ற சிறப்புப் பெற்றவராதலால், அவரது சமயவுணர்வை இந்நூலின் காப்புச் செய்யுட்கு வரைந்துள்ள விரிவுரை நன்கு வெளிப்படுத்திவிடுகிறது. "மாநிலம் சேவடியாத' எனத் தொடங்கும் அப்பாட்டை முதலிற் கண்ட பின்னத்துர் நாராயணசாமி ஐயர், வடமொழிச் செய்யுளொன்றின் துணை கொண்டு திரும்ாலுக்கேற்றி உரை கூறினார். ஏனைத் தொகை நூல்கள் பலவற்றிலும், பாரதம் பாடிய பெருந்தேவனார் செய்து சேர்த்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் பலவும் சிவநெறிக்கே உரியவாய் இருப்பதால், இது திருமாலுக்கேற்றியிருப்பதை இதுகாறும் அறிஞர் எவரும் ஆராயவில்லை. இதன்கண் "படர்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக என்று ஏட்டில் காணப்பட்ட பாடவேறுபாடு, சிவனுக்கேற்றுவதை எடுத்துக் காட்டி, இச்செய்யுளின் கருத்து முற்றும், அப்பெருந்தேவனார் காலத்தவரான சேரமான் பெருமாளுடைய பாட்டு ஒன்றில் அமைந்திருப்பதை ஆதரவாகக் கொண்டு விரித்துரைப்பது, ஈண்டுக்குறிக்கத் தக்கதாகும். மேலும், "தீதற விளங்கிய