பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புகழ்ப்பொலிவேடு! - - 55 திகிரியோன்” என்பதிலுள்ள “தீது” என்றது. “செம்பிற் களிம்பு போல உயிரிற்கிடந்து அதனை அறியாமை இருளில் செறித்திருக்கும் மலம்' என்றும், "திகிரி என்றது திருவருளாகிய ஆணை யென்றும் உரை கூறுவது சைவநூற்கொள்கை உயிர்கள் மலவிருளின்நீங்கி அறிவொளி பெறுதற்கென்றே இவ்வுலகு இறைவனால் படைக்கப்பட்டது எனப் படைப்பின் நோக்கத்தையும், அந்நோக்கம் நிறைவுறல் வேண்டி, இறைவன் உலகுயிர்களோடு ஒன்றாயும் உடனாயும் இருக்கும் திறத்தையும் உரையிடைப் பெய்து கூறுவது மிக்க இன்பம் தருகிறது. சித்தாந்த நூல்கள் உரைக்கும் தத்துவக் கூறுகளைப் பொறிவட்டம் புந்திவட்டம் உயிர்வட்டம் என்று மூன்றாக வகுத்து விளக்குவதும், 'மன நினைவு எண்ணங்களையும், அவற்றுள் நிகழ்ந்தவை நிகர்பவைகளையும் ஆராய்ந்து காணும் உயிர், அறிவு வடிவாய் விற்றிருக்கும் இடம் உள்ளம்” எனப்படுகிறது என்று தெரிவித்துத் திருவள்ளுவர், திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் நூல்களிலிருந்து ஆதரவு காட்டுவதும் ஒளவையவர்களின் சமய நூல் தெளிவை இனிது புலப்படுத்துகின்றன. . இங்ங்னம், தெளிந்த சமயவறிவும், பரந்த புலமையும், சொற்பொருளை நுணுகிக் காணும் மதிமையும் ஒருங்கு உடையவராதலால், ஆசிரியர் ஒளவை அவர்கள் அளிக்கும் இவ்வுரைநூல் தமிழ் அறிஞர்க்கு அறிவு விருந்தும், மாணவர்களுக்குப் பெருந்துணையுமாகும் பெருநலம் உடைய தென்றால் அது சிறிதும் மிகையாகாது. . பெளவம்போல் தமிழ்மொழிநூற் பரப்பெல்லாம் பயின்றளந்து பண்பின் மிக்க - செவ்வியநற் புலமைநலம் சிறந்தோங்கும் திருவாள! சீர்த்தி சான்றோய்! ஒளவை. சு. எனத்தமிழர் அகமகிழ்ந்து பாராட்டும் அறிஞர் ஏறே! . * . . . சைவமொடு தமிழ்தழைக்கத் தகவுழைப்போய்! நின்வரவுஎம் தவப்பே றாகும்! . . . . . . . . . - ந. ரா. முருகவேள்.