பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை உரைவளம் பேராசிரியர் கண. சிற்சபேசன் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் இயல்பிலேயே நகைச்சுவை வல்லவர். அவரது நகைச்சுவை நயந்தோன்றுமாறு நற்றிணையில் ஒரு பாடல் கிடைத்தது. வான் பெயல் ஆனாது பொழிந்தது. தினை காக்கும் கிெர்டிச்சி வெளியே வந்து குளிர்கொள் தட்டையால் கடியவில்லை; இதனைச் சாதகமாக்கிக் கொண்ட கடுவனொன்றும் அதன் மந்தியும் தம் கன்னங்கள் பொம்மென நிறையத் தினையை முக்கி வான் மழையில் நனைந்து தோன்றின. இக்காட்சி நோன்பியர் நீராடி நின்ற் தோற்றம் போன்றது. இத்னை நகைச்சுவை தோன்ற விளக்கந் தருகின்றார் உரையாசிரியர். மந்தியும் கடுவனும் அங்கை நிறையத் தினையை ஞெமிடிக் கொண்டது கையே கலனாக உண்ணும் நோன்பியன்ரப் போன்றிருந்த்து கொடுங்கவுள் நிறைய அத்தினையை அடைத்து நின்ற காட்சி, கையிடைக் கொண்ட சோற்றமலையை ஒரே முறையில் அடைத்துக் கவுள் புடைத்து நிற்கும் தவசியர் போல இருந்தது. மெய்ம்மயிர் பனிப்பதவான் பெயலில் ஈரங்கூர நின்றது, முடியுடை முனிவர் நீராடி ஈரம்புலராத தோற்றத்துடன் நின்றது போன்றிருந்தது. இவ்வாறு உவமையையும், பொருளையும் ஒன்றற்கொன்று முரணாகாமல் இரண்டின் ஏற்றமும் குறையாமல் உரை வகுத்த பெருமை பெரிதும் பாராட்டற்பாலது. இதுபோன்ற உரையெழுதுவார் உரை மட்டும் எழுதியமையால் பிறர் தமிழ் ம்ொழிக்குச் செய்ய வேண்டுவன வை என உணர்த்தவும் வேண்டும். ஒளவை சு. துரைசாமிப் ள்ளையவர்கள் தம் கூர்த்தமதியாலும், தேர்ந்த அனுபவத் தாலும் அறிவுரை பகரும் இடமொன்றுண்டு. "தமிழ் நாட்டின் வரலாற்றினைத் தமிழ் நன்கறிந்த தமிழுள்ளம் படைத்த தமிழ் நன்மக்களே முற்பட்டுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிய நினைந்து எழுதுங்காலம் உண்டர்யின்” ந்ன்று என்று அவரது அருள்நிறை உள்ளம் வேட்கையுறுகின்றது. தமிழ் மாநில அரசு இதனை மேற்கொண்டு செய்யவேண்டுமென்ற தம் ஆர்வத்தினையும் ஆசிரியர் குறிக்கின்றார். ; உரை முழுவதையும் நன்கு கண்ட எனக்கு ஒரே ஒரு జ్ఞ్గల్గి உரையைக் காண இரு கண்ணும், க்ருத ஒரு நஞ்சமும், அறிய ஆறறிவும்,எழுதி ஒரு கையும் ஒரு போதும் போதா. - - . . . . . . . . . - கற்றார்க்குக் கழிநலம் சேர்க்கும் பாகினும் இனிய இவ்வுரை கருத்துக் கருவூலம், தமிழ் மரபின் புதிய திறவுகேர்ல், உண்ர்நடைச் சறிவின் உயர்ந்த தோற்றம். ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் தமிழ் நெல்லிக்கனிய்ை உண்டவர்.