பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் நலம் பிள்ளையவர்கள் சைவ அறிவும், நெறியும் சான்றவர். சைவசித்தாந்தக் கலைக்கடல் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். எனினும் பெரியார்பால் பேரன்பும் பேரீடுபாடும் உடையவராய் விளங்கினார். இன எழுச்சிக்குப் பாடுபட்டுவரும் தமிழின முனிவர் என்று ஓரிடத்தில் பெரியாரைக் குறித்திருக்கிறார். பகுத்தறி வெழுச்சியும், முன்னேற்ற ஆர்வமும் சிறந்து விளங்கிய பிள்ளையவர்கள் போளுரில் பணியாற்றியபோது பெரியாரின் படம் ஒன்றினை வாங்கிக் கண்ணாடிச் சட்டமிட்டுச் சுவரிற் பொருத்தியிருந்தார். அவ்வூரினின்றும் மாறுதல் பெற்றுச் செல்லும்போது, அப்படம் செம்மையாகத் திகழவேண்டும் என்னுங் கருத்தில் போளுரில் சோடாக்கடை வைத்திருந்த மாணிக்கம் என்பவரிடம் ஒப்படைத்துச் சென்றார் உரைவேந்தர். பெரியார் இந்தியெதிர்ப்பு மறியல் செய்தகாலை பிள்ளையவர்களும், தமிழ்க்காப்புப் போரணியில் பேரீடு பாடுற்றார். தன் மதிப்பியக்கக் கருத்துகளைப் பரப்புவதிலும், ஏற்பதிலும் தமிழ்ப்புலவருலகில் ஒளவை அவர்களே முதல்வராக விளங்கினார். தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கருதும் பெருமனம் உரைவேந்தரின் உயர் மனத்திற்குரியதாயிருந்தது. திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் பேராசிரிய ராகப் பிள்ளையவர்கள் அமர்ந்து தமிழ்ப்பணியாற்றினார். அப்போது பண்டித நாவலர், திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், ‘மணிமேகலையில் அமைந்துள்ள சமயப் பகுதிகளுக்கும், தருக்கப் பகுதிகளுக்கும் சீரிய கூரிய உரை காண வேண்டும்” என நம் பிள்ளையவர்களுக்குப் பணித்தார்கள். அதனையேற்று திருவேங்கடவன் கீழ்க்கலைக் கல்லூரியில் பணியாற்றிய வடநூற் பேராசிரியர்களாலும், அங்கிருந்த நூல் நிலையத்து நூல்களின் உதவியாலும் அரும் பயன் பெற்றார். இதனிடையே யசோதா காவிய ஏடு பிள்ளைக்குக் கிடைத்தது. அதனை நன்கு ஆராய்ந்து அருமையான உரையெழுதி வெளியிட்டார். “சுமார் நாற்பது ஆண்டுகட்குமுன் யான் தமிழறிவு ஒரளவு பெற்றுப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்று இன்புற்றகாலை, சில நூல்கள் குறையுற்றிருந்தமை கண்டு, எங்ங்னமேனும் முயன்று நிறைவு செய்வது தமிழன்னைக்குச் செய்யத்தக்க பணியென்ற கருத்தையுட் கொண்டதோடு அதனையே என் வாழ்வின் குறிக்கோளாக்க் கொண்டேன்” என