பக்கம்:உலகத்தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

உலகத் தமிழ்


லிருந்து விடுதலை பெற்று, அநேகமாகக் கடைசி நேரத் தில் தமிழ் மன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தேன்.

“பழம் பெரும் அரண்மனையிலே பாவலர் போற்ற, காவலர் இமையாது காக்க, அரியணைமேல் கொலு வீற்றிருந்த தமிழ்த்தாயை, உலக அரங்கிலே கொண்டு வந்து நிறுத்திவிட்டோம். இது நம் பொறுப்பினைப் பன்மடங்கு அதிகமாக்கிவிட்டது.

“மக்களிடையே வந்துவிட்ட தலைவர் கென்னடிக்குப் போதிய பாதுகாப்புச் செய்யத் தவறியது எத்தனை தீங்காக முடிந்தது! அது நமக்குப் படிப்பினை. அரண்மனையை விட்டு அழைத்து வந்துள்ள நம் தமிழ் அன்னையைக் காக்க மிக விழிப்பாயிருக்க வேண்டும். புதிய பாதுகாப்பு முறைகளை அறிந்து, நன்கு பயின்று கொள்ள வேண்டும். தமிழைக் கற்பதில் எவ்வளவு ஆர்வங் கொண்டிருந்த போதிலும்; வெளிநாட்டார் நம் மொழியைக் காப்பாற்றுவார் என்று ஏமாந்து விடக் கூடாது. இளைஞர்கள் அதிக விழிப்போடும் அதிக ஆர்வத்தோடும், தேவையான அத்தனை அறிவையும் பெற்றுத் தமிழைப் பாதுகாக்க வேண்டு'மென்று வேண்டிக் கொண்டேன், அறுபதை எட்டும் நான் வேறு என்ன செய்ய முடியும்?

இதைப் பற்றியே இரவு பகலாய்ச் சிந்தித்தேன், சிந்திக்கிறேன். என்னுள் எழும் அச்சத்தை உங்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்ல?

நாட்டுப் புறத்தில் நல்ல மூக்குமுழியோடு பிறந்து, கள்ளம் கபடு அறியாது வளர்ந்த சிவப்புக் கன்னி பொருத்தி புகழ் ஆசையால் உந்தப்பட்டு, தன்னந் தனியே திக்குத் தெரியாத புது நகரத்திற்கு வந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/101&oldid=481253" இலிருந்து மீள்விக்கப்பட்டது