பக்கம்:உலகத்தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதழ்களின் தமிழ்ப் பணி

103

என்ன ஆவாள்? அத்தகைய நிலைக்குக் கன்னித் தமிழை ஆளாக்கி விடுவோமோ என்ற அச்சம் என்னை அலைக் கழிக்கிறது. நான் அஞ்சிப் பயன் என்ன? ஏழை சொல், அம்பலம் ஏறுமோ?


18. இதழ்களின் தமிழ்ப் பணி

மாநாட்டிற்குத் திரும்பிப் போவோம். இக்காலத் தமிழ் இலக்கியத்தை மேலும் சிறிது கவனிப்போம். சென்னை, இலயோலா கல்லூரிப் பேராசிரியர் மறைத் திரு. ஞானப்பிரகாசம் அடிகளாரின் உரையைக் கேட்போம். 1969-ஆம் ஆண்டு தமிழில் வெளியான, வார, மாத இதழ்களைப் பற்றிய ஆராய்ச்சியுரை யொன்றை அவர் நிகழ்த்தினார்.

சென்ற ஆண்டு அக் கல்லூரிப் பேராசிரியர் சிலரும், மாணவர் சிலரும் சேர்ந்து தமிழ் வார மாத இதழ்களை ஆராய்ந்தார்களாம். ஏன்? பல இலட்சக் கணக்கானவர்கள் வீடுகளிலும் வெளியிலும் அலுவலகங்களிலும் படிப்பவை இவையே. இவையே, அத்தனை மக்களின் நோக்கையும் போக்கையும் உருவாக்குகின்றன. இவ்விதழ்கள் எவ்வகை, படிப்போர் அவ்வகை.

‘கல்கி’ ‘ஆனந்தவிகடன்’ ‘தினமணி கதிர்’ ‘குமுதம்’ ‘கல்கண்டு’ ஆகிய வார இதழ்கள் அவர்களால் ஆராயப் பட்டன, ‘கலைக்கதிர்’, ‘தீபம்’, ‘மஞ்சரி’, ‘கண்ணதாசன்’ ஆகிய மாத இதழ்களும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை.

வார இதழ்கள் பெரிதும் சிறுகதைகளை நம்பியுள்ளனவாம். இச் சிறுகதைகள் பெரும்பாலும், காதல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/102&oldid=481967" இலிருந்து மீள்விக்கப்பட்டது