பக்கம்:உலகத்தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

உலகத் தமிழ்


தலைமை தாங்கித் தூண்டி வளர்த்த இனவெறி; ஆளப் பிறந்தவர்கள் ஜெர்மானியர்களே என்ற அகந்தை; போர்க்கருவிகளின் குவியல், யூத வேட்டை ஆகியவை இரண்டாவது உலகப் போரில் கொண்டு சேர்த்தன. உலகம் முழுவதையும் கட்டியாளத் திட்டமிட்டுப் போர் முரசு கொட்டினார் இட்லர். கி. பி. 1939 முதல் 1945 வரை முன்பைவிடக் கடுமையான, கொடுமையான, கோரமான பெரும்போர் உலகைக் கெளவிக்கொண்டது. இங்கிலாந்து, இரஷ்யா ஆகிய நேச நாடுகளின் அஞ்சாமை, தியாகம்; அமெரிக்க போன்ற நாடுகளின் துணை, அணுக்குண்டு கண்டுபிடிப்பு ஆகியவை ஜெர்மனிக்கும் அதன் துணைவர்களான இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் தோல்வியைத் தந்தன. இப்போரில் அழிந்த நகரங்கள் பலப்பல; பாழான பகுதிகள் எத்தனை எத்தனையோ!

தோல்வியின் விளைவாக, ஜெர்மனி இரு கூறுகள் ஆயிற்று. மேற்குப் பகுதி நேசகாடுகளின்-அதாவது இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதிக்கத்தில் வந்தது. கிழக்குப் பகுதி இரஷ்யாவின் ஆதிக்கத்தில் வந்தது. பிரிந்த ஜெர்மனி, பிரிந்த ஜெர்மனியாகவே இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளாகியும் வெவ்வேறு அரசுகளாகவும், பொருளாதார அமைப்புகளுடையதாகவும் உள்ளது ஜெர்மனி.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி அடுத்தடுத்துக் குண்டுமாரிக்கு ஆளானது. நகரங்களில் பெரும் பலானவை சாம்பலான பிறகே ஜெர்மனி அடி பணிந்தது. வளத்தோடும் வலிவோடும், செல்வத்தோடும் மாட மாளிகைகளோடும், பெருந் தொழிற் கூடங்களோடும் போரைத் தொடங்கிய ஜெர்மனி வள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/21&oldid=480546" இலிருந்து மீள்விக்கப்பட்டது