பக்கம்:உலகத்தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. ஜினிவாவில் முதல் நாள்

“நீங்கள் ஜினிவா செல்ல வேண்டியவர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் ஏறுசீட்டு அப்படிக் காட்டுகிறது. அப்படியானால் உடனே புறப்படுங்கள். ஜினிவா பயணிகளுக்குக் குரல்கொடுப்பது காதில் விழவில்லையா?” என்ற பக்கத்தில் வீற்றிருந்த ஆங்கிலேயர் நினைவுபடுத்தினார். நொடிப் பொழுதில் கருத்துலகத்திலிருந்து விடுபட்டு எழுந்தேன்.

பிராங்க்போர்ட்டிலிருந்து ஜினிவாவிற்கு சுவிஸ் விமானத்தில் பயணமானேன். அது குறித்த நேரத்தில் புறப்பட்டது. தெற்கு நோக்கிப் பறந்தது; விமானத்தில் உட்காரும் இடத்துக்கு மேலே பரண் போன்ற இடம் உண்டு. நம் விமானங்களில் திறந்த பரண்களே காணலாம். எனவே அவற்றில் கைப்பையைக் கூட வைக்கக் கூடாது என்பது விதி; சுவிஸ் விமானத்தில் பரணுக்கு வலைப் பின்னல் இருந்தது. எனவே பயணிகள் சிறு பைகளையும் சிறு பெட்டிகளையும் காலுக்கடியில் வைத்துக் கொண்டு தொல்லைப்படவில்லை; வலைப் பரணில் வைத்து விடுகிறார்கள்.

ஒரே ‘ஒடுவழி’யில் ஒன்றன் பின் ஒன்றாக என் விமானமும், அதற்குமுன் மற்றொரு விமானமும் செல்லக் கண்டேன். முன்னையது மேலேறியதும் நான் சென்ற விமானமும் மேலே கிளம்பிப் பறந்தது.

நாளோ, மப்புமந்தாரமற்ற நாள். எனவே நெடுந்தூரம் தெளிவாகத் தெரிந்தது. நாங்கள் கடந்து சென்ற பகுதியும் பெரிதும் மலைப்பகுதியே. விமானத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/27&oldid=480553" இலிருந்து மீள்விக்கப்பட்டது