பக்கம்:உலகத்தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

உலகத் தமிழ்


ஏரியில் நீந்தி விளையாடுவோரும் பலர். நாம் குற்றால அருவியில் மூழ்கி மகிழ அவாவுவது போல், மேனாட்டு மக்கள் கடல்களிலும் ஏரிகளிலும் நீந்தி விளையாடப் பேராவல் கொள்கின்றார்கள். அதற்காகக் கோடைக் காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். கோடையில் தங்களுக்கு உரிய விடுமுறை எடுத்துக்கொண்டு, குடும்பம் குடும்பமாகக் கடற்கரை ஊர்களுக்கும், ஏரிக்கரை ஊர்களுக்கும் சுற்றுலாச் செல் வார்கள். ஜினிவா நகரின் மக்கள் தொகையைவிடப் பயணிகள் தொகை அதிகம். இடுப்புக் கச்சையும் மார்புக் கச்சையும் மட்டும் அணிந்து கடற்கரை, ஏரிக்கரை ஓரங்களில், திறந்த வெளியில் படுத்துக் கொண்டு, வெய்யில் காய்வதில் மேனாட்டு மக்களுக்குப் பித்து.

ஜினிவா, பல உலக அவைகளுக்குத் தலைமைநிலையம். முன்பு உலக நாடுகளின் கழகம் (League of Nations) இங்கிருந்து பணியாற்றியது. இப்போது ஐக்கிய நாடுகள் அவையின் (யூ. என். ஒ.வின்) பிராந்திய அலுவலகங்கள் இங்கிருந்து பணி புரிகின்றன. உலகச் சுகாதார சபை யின் தலைமையிடமும் இதுவே. ஐ. எல். ஒ , அதாவது அனைத்துலகத் தொழிலாளர் நிலையத்தின் தலைமை இடம் ஜினிவா.

உலக அவைகள் சிலவற்றின் தலைமை இடமாக இருக்கும் ஜினிவா, சுவிட்சர்லாந்தின் தலைநகர் அன்று. அந்நாட்டின் தலைநகர் பெர்ன்.

சுவிட்சர்லாந்தை நினைத்ததும், கடிகாரம் மனக்கண் முன் தோன்றும். நெடுங்காலமாகக் கடிகார உற்பத்திக்குப் பெயர் பெற்றது இந்த நாடு. பெருந் தொழிற் கூடங்களில் மட்டுமன்று கடிகார உற்பத்தி, கடிகாரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/31&oldid=480790" இலிருந்து மீள்விக்கப்பட்டது