பக்கம்:உலகத்தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் சிறப்பு

33

களுக்கான சிறுசிறு பகுதிகளையெல்லாம், வீட்டுத் தொழிலாகச் செய்கிறார்களாம். அவரவர் வீட்டிலிருந்த படியே துல்லியமான கருவிகளைக் கொண்டு நுட்பமான பகுதிகளைச் செய்து, தொழிற்சாலைக்குக் கொடுக்கின் றனர். தொழிற்சாலைகளில் அவற்றை உரிய வண்ணம் பொருத்திச் சரிபார்த்து, ஒட வைத்துச் சோதித்த பிறகு விற்பனைக்கு அனுப்புகிறார்கள். சுவிட்சர்லாந்து, நவீன மருந்துகள் உற்பத்திக்கும் முக்கியமானது.


5. சுவிட்சர்லாந்தின் சிறப்பு

சுவிட்சர்லாந்து ஒரு மொழி நாடன்று; நான்கு மொழி நாடு. ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ரோமான்சு ஆகிய நான்கும் ஆட்சி மொழிகள். ஒவ்வொரு கான்டனில் (பிராந்தியத்தில்) ஒவ்வொரு மொழி செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. நாட்டாட்சியில் நான்கிற்கும் இடம். இவற்றிற்கு எழுத்து ஒன்றே.

சுவிட்சர்லாந்தில் பிராந்திய அரசிற்கே அதிக அதிகாரம் நாட்டாட்சிக்கு வரையறுக்கப்பட்ட குறைந்த அதிகாரமே.

சட்ட மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரியாக நடக்காத போது, திரும்ப அழைத்துக் கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உண்டு. இத்தனை வாக்காளர்கள், திருப்பி அழைக்கும்-அதாவது பதவி நீக்கக் கோரிக்கையில்-கையெழுத்திட்டால் சட்டமன்ற உறுப்பினர் தம் பதவிக் காலம் முடிவதற்குமுன் விலகி விட வேண்டும் இது அரசியல் சட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/32&oldid=480791" இலிருந்து மீள்விக்கப்பட்டது