பக்கம்:உலகத்தமிழ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

உலகத் தமிழ்


சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனம் போன போக்கிலே நடந்துகொள்ளாதபடி இது தடுக்கிறது. எனவே, அங்கே சட்ட மன்ற உறுப்பினர் கூடுவிட்டுக் கூடு பாய முடியாது; தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட முடியாது. திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளருக்கு இருப்பது மக்களாட்சிக்குத் துணை! தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தடம் புரண்டு உருளாதபடி கட்டை போடுகிறது.

சுவிட்சர்லாந்து அழகிய நாடு; மலைவளமும் வன வளமும் செறிந்த நாடு; பயிர் வகைகளும் தொழில் வகைகளும் செழித்த நாடு. மக்கள் வளமும் பெற்ற நாடு. சுவிஸ் மக்கள் உடல் நலம் உடையவர்கள். குழந்தைகள் அத்தனையும் கொழுகொழுவென்று இருக்கின்றன. உடல் நலத்தோடு சுறுசுறுப்பும் மிகுதி. இரண்டும் எதற்குப் பயன்படுகின்றன? நல்வாழ்விற்குப் பயன்படுகின்றன. நீண்ட நெடுங்காலமாக, ஒன்றி வாழும் வழியிலே வளர்ந்தவர்கள் சுவிஸ் மக்கள். அவர்களது மனவளமும் பெரிது. பல நூற்றாண்டுகளாகப் பல மொழி மக்களும் இணைந்து ஒன்றி, ஒரே நாட்டவராக வாழ்கிறார்கள். இதைத் திரு. சிதம்பரநாதனிடம் கூறி மகிழ்ந்தேன்.

“ஆம். நாட்டில் வாழும் நான்கு மொழிகளுக்கும் ஒரே உரிமை கொடுத்திருப்பதால் மொழிப் பகை இல்லை. அரசியல் அதிகாரம் மைய அரசிலே குவியாமல் பிராந்திய ஆட்சிகளுக்கும் பரவி இருப்பதால் அரசியல் போட்டிப் புயல்கள் மைய அரசினை ஆட்டிப் படைப்ப தில்லை.

அது மட்டுமா? சின்னஞ் சிறு நாடாயிருப்பினும் பன்னூறு ஆண்டுகளாகத் தன் காலில் நின்று வளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/33&oldid=480792" இலிருந்து மீள்விக்கப்பட்டது